For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இளைஞர் பாசறைகள்-ஜெட் வேகத்தில் ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் எங்கும் அதிமுக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறைகளை உருவாக்கவும் அதில் லட்சக்கணக்கான உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை அமைப்பு உருவாக்கப்படும் என்று கழகப் பொதுக்குழுவில் எடுத்த முடிவிற்கிணங்க, இந்த பாசறைகள் அமைக்கும் பணி மார்ச் 7ம் தேதி தொடங்கும்.

இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக, தலைமைக் கழக நிர்வாகிகள் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என அறிவித்துள்ளார்.

அதன்படி, கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் வடசென்னை, தென் சென்னை மாவட்டப் பொறுப்பாளராக பணியாற்றுவார். வட சென்னை மாவட்டக் குழுவில் எம்எல்ஏக்கள் சேகர்பாபு, சீனிவாசன் உள்ளிட்டோரும், தென் சென்னை மாவட்டக் குழுவில்
மைத்ரேயன் எம்பி, எம்எல்ஏக்கள் கலைராஜன், செந்தமிழன், பதர்சயீத், பலராமன், விஜயகுமார் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல பன்னீர்செல்வம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களையும், செங்கோட்டையன் விழுப்புரம் வடக்கு, ஈரோடு வடக்கு மாவட்டங்களையும், ஜெயக்குமார் திருவள்ளூர், கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு மாவட்டங்களையும்,

முத்துசாமி விழுப்புரம் தெற்கு, ஈரோடு தெற்கு மாவட்டங்களையும்

தம்பிதுரை வேலூர் மேற்கு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களையும், பொள்ளாச்சி ஜெயராமன் கோவை மாநகர், கோவை புறநகர் வடக்கு, கோவை புறநகர் தெற்கு மாவட்டம்.

பழனிசாமி சேலம் மாநகர், சேலம் புறநகர் கிழக்கு, சேலம் புறநகர் மேற்கு மாவட்டங்களையும், தளவாய்சுந்தரம் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களையும்

செம்மலை நாமக்கல், கரூர் மாவட்டங்களையும், பா.வளர்மதி காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மேற்கு மாவட்டங்களையும், பாலகங்கா-தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு மாவட்டங்களையும்

நயினார் நாகேந்திரன் வேலூர் கிழக்கு, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களையும், கருப்பசாமி நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களையும், எஸ்.டி.கே.ஜக்கையன் நெல்லை மாநகர், நெல்லை புறநகர் மாவட்டங்களையும்,

சிவபதி திருச்சி மாநகர், திருச்சி புறநகர் மாவட்டங்களையும், உதயகுமார் மதுரை மாநகர், மதுரை புறநகர் மாவட்டங்களையும், கோகுல இந்திரா விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களையும்

வேணுகோபால் திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு மாவட்டங்களையும்,
ஆதிராஜாராம் நீலகிரி, பெரம்பலூர் மாவட்டங்களையும் கவனிப்பார்கள்.

இந்த தலைமைக் கழகப் பொறுப்பாளர்களுக்கும், மாவட்டக் குழுக்களுக்கும் உதவி புரிய, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாநகராட்சி, பகுதி, வட்டம், ஒன்றிய, நகர, பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள்,

பிற அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இன்னாள் மற்றும் முன்னாள் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிமுகவினர் அந்தந்த ஒன்றிய, நகர பேரூராட்சிக் குழுக்களில் இடம் பெறுவார்கள் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X