மோசமான சர்வாதிகாரி முஷாரப்!

பரேட் என்கிற அமெரிக்க இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்தப் பட்டியல் முடிவு செய்யப்பட்டது.
முஷாரப் குறித்து அப்பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், பாகிஸ்தான் அரசியல் சட்டத்தை முடக்கிப் போட்டு, ஜனநாயகத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்கியவர் முஷாரப். நீதிமன்றங்களையும் இழுத்து மூடினார். ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்களை சிறையில் அடைத்தார். தொடர்ந்து அதிபர் பதவியில் நீடிப்பதற்காக அடக்குமுறை சட்டத்தையும் கொண்டு வந்தார்.
முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷெரீப், பெனாசிர் பூட்டோ ஆகியோரை பாகிஸ்தானுக்கு வர அனுமதித்தாலும், தேர்தலில் பங்கேற்காமல் ஷெரீப்பை தடுத்து நிறுத்தினார். முஷாரப் அரசின் பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக பெனாசிர் கொல்லப்பட்டார்.
முஷாரப் மோசமானவராக இருந்தாலும் கூட அமெரிக்காவின் உற்ற தோழனாக பாகிஸ்தான் விளங்கி வருகிறது.
கடந்த ஆண்டு பாகிஸ்தானிலிருந்து 3 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கர்கள் பருத்தி ஆடைகளையும், துணிகளையும் வாங்கியுள்ளனர். முஷாரப் அரசியல் சட்டத்தை முடக்கிய பிறகும் கூட, பாகிஸ்தானில் ஜனநாயகம் முன்னேறியதாக அதிபர் புஷ் வர்ணித்தார்.
கடந்த 6 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா 7 பில்லியன் டாலருக்கும் மேலான ராணுவ உதவிகளைச் செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
நம்பர் ஒன் சர்வாதிகாரியாக வட கொரிய அதிபர் கிம் ஜோங் இல் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
சீன அதிபரையும் பரேட் மோசமான சர்வாதிகாரிகள் பட்டியலில் சேர்த்துள்ளது. அவருக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. அதாவது முஷாரப்பை விட மோசமானவராம் அவர்.
இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பெயர் இடம்பெறவில்லை.
மோசமான சர்வாதிகாரிகள் பட்டியல்:
1. கிம் ஜோங் இல் - வட கொரிய அதிபர்.
2. ஓமர் அல் பஷீர் - சூடான் அதிபர்.
3. தான் ஷ்வே - மியான்மர் ராணுவ ஆட்சியாளர்.
4. அப்துல்லா - சவூதி அரேபிய மன்னர்.
5. ஹூ ஜின்டாவோ - சீன அதிபர்
6. ராபர்ட் முகாபே - ஜிம்பாப்வே அதிபர்.
7. சயீத் அலி காமேனி - ஈரான் மதத் தலைவர்.
8. பர்வேஸ் முஷாரப் - பாகிஸ்தான் அதிபர்.
9. இஸ்லாம் கரிமோவ் - உஸ்பெகிஸ்தான் அதிபர்.
10. இசயாஸ் அப்வெர்கி - எரித்ரியா அதிபர்