நகைக் கடையில் கொள்ளை-நாடோடி கும்பல் கைவரிசை
காரைக்குடி: காரைக்குடியில் நகைக் கடையில் பெரிய ஓட்டை போட்டு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
காரைக்குடி அருகில் உள்ள புதுவயலில் ஒரு பிரபல நகைக்கடை உள்ளது. இந்த நகைக் கடையை காலையில் அதன் உரிமையாளர் திறந்தபோது பின் பக்க சுவரில் பெரிய ஓட்டை இருந்தது.
கடையில் இருந்த ரூ. 7 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் திருடப்பட்டிருந்தன.
தகவல் அறிந்த காரைக்குடி போலீசார் மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர்.
மோப்ப நாய் ஓடி ரோட்டோரம் வசித்து வரும் நடோடி கூட்டத்தினர் வசிக்கும் கூடாராம் அருகே சென்று நின்றது.
இதனால் அந்த நாடோடி கும்பல் மீது போலீஸ் பார்வை திரும்பியது. இதனால் அந்த நாடோடி கும்பலில் சந்தேகத்திற்கு உரியவர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே கடந்த சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் ஒரு நகைக் கடையில் இதே முறையில் கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது.