For Daily Alerts
Just In
பாரதிராஜா மகள் நிச்சயதார்த்தம்

மணமகன் ராஜ்குமார், பாரதிராஜாவின் மனைவின் தூரத்து உறவினராம். ஆஸ்திரேலியாவில் எம்பிஏ பயின்றவரான ஜனனியை மணக்கும் ராஜ்குமார் ஒரு சினிமா கேமராமேன்.
மேடையில் மணமக்களுடன் பாரதிராஜாவும் அவரது நெருங்கிய நண்பருமான இசைஞானி இளையராஜாவும் அமர்ந்திருக்க மந்திரங்கள் ஓத நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள், ஏவிஎம் சரவணன் உள்பட முன்னணி தயாரிப்பாளர்கள், டெக்னீசியன்கள், பங்கேற்றனர்.
மேடையில் இளையராஜா இருந்ததாலோ என்னவோ கவியரசு வைரமுத்து கீழேயே அமர்ந்து கொண்டார்.