For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எறையூரில் பாதிரியார்கள் முகாம்-மதமாற்றத்தைத் தடுக்க தீவிர முயற்சி

By Staff
Google Oneindia Tamil News

Hands come togther
விழுப்புரம்: எறையூர் மாவட்டத்தில் மதம் மாறப் போவதாக கூறியுள்ள வன்னிய கிறிஸ்துவர்களை சமாதானப்படுத்துவதற்காக புதுச்சேரியிலிருந்து நான்கு பாதிரியார்கள் அடங்கிய குழு விரைந்துள்ளது.

எறையூர் கிராமத்தில் வன்னிய கிறிஸ்தவர்களுக்கும், தலித் கிறிஸ்தவர்களுக்கும் சமீபத்தில் பெரும் மோதல் ஏற்பட்டது. மோதலை அடக்க போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் தலித் பிரிவைச் சேர்ந்த தெரசம்மாள் என்பவர் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது உடலை பொதுப் பாதையில், சவ வண்டியில் வைத்து கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

இதற்கு வன்னிய கிறிஸ்தவர்கள் கடும் எதிர்ப்பு ெதரிவித்தனர். இந்த நிலையில் வன்னிய பிரிவைச் சேர்ந்த சர்க்கரையாஸ் என்பவர் இறந்தார். அவரை தலித் பிரிவினர் பயன்படுத்திய வண்டியில் கொண்டு செல்லாமல், சவப் பெட்டியைத் தூக்கியபடியே சென்று அடக்கம் செய்தனர்.

மேலும், தங்களையும், தலித் கிறிஸ்தவர்களையும் தனியாகப் பிரித்து தனிப் பங்கு அமைக்க வேண்டும். இரு பிரிவினருக்கும் தனித் தனியாக சர்ச்சுகள் அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏப்ரல் 1ம் தேதி 20 ஆயிரம் கிறிஸ்தவ வன்னியர்களும் மதம் மாறுவோம் என்றும் அறிவித்தனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் விவாகரத்தை பெரிதாகாமல் தடுக்கவும், மதமாற்ற முயற்சிகளை தடுக்கும் முகமாகவும், புதுச்சேரியிலிருந்து நான்கு பாதிரியார்கள் அடங்கிய குழு எறையூர் வந்தது.

இந்தக் குழுவில் வன்னிய கிறிஸ்தவப் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினர். இருப்பினும் இதில் உடன்பாடு ஏற்பட்டதா, இல்லையா என்பது குறித்துத் தெரிவிக்கப்படவில்லை.

ஒரே கடவுள் இயேசு-கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம்:

இதற்கிடையே, தலித் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, வன்னிய கிறிஸ்தவர்களாக இருந்தாலும் கடவுள் ஒருவர், இயேசு கிறிஸ்து முன் அனைவரும் சமம். இதில் பாரபட்சம் பார்க்கக் கூடாது என்று கிறிஸ்தவ முன்னேற்றக் கழகத் தலைவர் ஜோசப் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எறையூரில் உள்ள வன்னிய கிறிஸ்தவர்களில் 37 பேர் பாதிரியார்கள், 127 பேர் கன்னியாஸ்திரிகள்.

அனைவருமே இறை நம்பிக்கை கொண்டவர்கள். கிறிஸ்தவம் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள். மன உளைச்சலால் மத மாற்ற முடிவை அவர்கள் அறிவித்துள்ளனர். ஆனால் உளப் பூர்வமாக அவர்கள் அந்த முடிவை எடுத்திருக்க மாட்டார்கள். எனவே நிச்சயம் அவர்கள் மதம் மாற மாட்டார்கள்.

இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்ைக உள்ளது என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X