இந்தியா வாங்கிய வெளிநாட்டுக் கடன் ரூ.8 லட்சம் கோடி
டெல்லி: நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்காக வெளிநாடுகளில் இருந்து இந்தியா வாங்கியுள்ள கடன் எவ்வளவு தெரியுமா? ரூ.8 லட்சம் கோடி. இது இந்தியர்களின் தலைக்கு சராசரியாக ரூ.7,218 ஆகும்.
உலக வங்கி, பன்னாட்டு நிதியம், ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றிடம் இருந்து நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்காக இந்தியா கடன் வாங்கியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.7,57,967 லட்சம் கோடியாக இருந்தது. கடந்த 2007-08 நிதியாண்டில் டிசம்பர் மாத இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி ரூ.7,94,017 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
நம்நாட்டின் மொத்த மக்கள் தொகை 110 கோடி என்று வைத்துக் கொண்டால், சராசரியாக ஒவ்வொரு இந்தியருக்கும் இந்த கடனில் உள்ள பங்கு ரூ.7,218.
டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததால் செலுத்த வேண்டிய கடனில் ரூ.24000 கோடி சுமை அதிகரித்துள்ளது.
நீண்ட கால கடன் தொகையில் ரூ.24000 அதிகரித்து ரூ.6,64,400 கோடியாக உயர்ந்துள்ளது. குறுகிய் கால கடன் தொகையில் 400 கோடி அதிகரித்து ரூ.1,40,000 கோடியாக உயர்ந்துள்ளது.
வெளிநாட்டுக் கடன் அதிகரித்து வரும் அதேவேளையில் இந்தியவாழ் வெளிநாட்டினரின் சேமிப்பும் ரூ. 4300 கோடி குறைந்துள்ளது.