For Daily Alerts
Just In
கோவையில் கன்னட சங்கம் மீது தாக்குதல்
கோவை: கோவையில் இன்று கன்னட சங்கம் தாக்கப்பட்டது. பஸ் மறியலும் நடந்தது.
பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து தமிழகத்திலும் போராட்டம் வெடித்துள்ளது. நேற்று மதுரை, கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல இடங்களில் ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை நடந்தது.
இன்றும் தமிழகத்தில் போராட்டம் தொடர்கிறது. கோவையில் உள்ள கன்னட சங்கத்தை சிலர் தாக்கினர். இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து வந்து தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்தனர். மேலும் சாலை மறியல் போராட்டமும் நடந்தது.
இதேபோல சத்தியமங்கலத்தில் இன்று கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தை வழிமறித்து மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஈரோட்டில் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவின் கொடும்பாவி எரித்துப் போராட்டம் நடத்தப்பட்டது.