For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தினசரி ஒரு முட்டை சாப்பிடுவது ஆபத்து?

By Staff
Google Oneindia Tamil News

Egg
லண்டன்: வாரத்துக்கு 7 அல்லது அதற்கு அதிகமாக முட்டை சாப்பிட்ட நடுத்தர வயதினருக்கு இதய நோய் அபாயம் 23 சதவீதம் அதிகரித்ததாக ஒரு மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நம் நாட்டில் 'பூரண ஆரோக்கியத்துக்கு தினமும் ஒரு முட்டை சாப்பிடுங்கள்' என்று அரசு மற்றும் தனியார் கோழிப்பண்ணை விளம்பரங்களை அடிக்கடி பார்த்திருக்கின்றோம்.

முட்டை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் ஏற்படும். சரி. ஆனால் எல்லாருக்குமே இது பொருந்துமா என்பதுதான் கேள்வி.

முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் சுமார் 220 மி.கி. கொலஸ்டிரால் இருக்கிறதாம். அப்படியென்றால் இதயநோய் பாதிப்பு உள்ளவர்கள் முட்டை சாப்பிடக் கூடாதல்லவா? என்று கேட்பது புரிகிறது.

அப்படிப்பட்டவர்கள் முட்டை சாப்பிட்டால் ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகமாகி மாரடைப்புகூட ஏற்படலாமாம். தினசரி ஒரு முட்டை அல்லது வாரத்துக்கு 7 முட்டைக்கு மேல் சாப்பிட்ட நடுத்தர வயதினருக்கு இதய நோய் ஏற்படுவதற்கான அபாயம் 23 சதவீதம் கூடுதலாக இருந்ததாக ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதெல்லாம் கட்டுக்கதை. முட்டை பற்றி தவறான செய்திகளை பரப்புகிறார்கள் என்று சில மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். உணவு மூலம் உடலில் சேரும் கொலஸ்டிரால் எளிதில் ஜீரணிக்கப்பட்டுவிடும் என்பதால் கவலைப்படவேண்டியதில்லை என்று ஆறுதலாக கூறுகின்றனர்.

அதே சமயத்தில், அமெரிக்காவை சேர்ந்த ஒரு மருத்துவ இதழ் ஊட்டச்சத்து பற்றி வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. கொலஸ்டிரால் அதிகமுள்ள, குறிப்பாக நீரிழிவால் பாதிக்கப்பட்ட ஆண்கள் முட்டை சாப்பிட்டால், அவர்களது பாதிப்பு அதிகரித்து மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படக்கூடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டையை விரும்பி சாப்பிடும் வயதான, குண்டான ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு மது மற்றும் சிகரெட் மீது மோகம் அதிகரிக்குமாம். சிகரெட்டும், மதுவும் இதய நலத்துக்கு ஏழாம் பொருத்தம் என்பதை சொல்லவே தேவையில்லை.

அப்படின்னா... முட்டை சாப்பிடலாமா? வேண்டாமா?

அது பற்றிய உலகளாவிய சர்ச்சை நீடிக்கிறது. இதற்கு குழந்தைகள் விதிவிலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

வளரும் குழந்தைகளுக்கு தினசரி உணவில் முட்டை சேர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கண்டிப்பாக வலியுறுத்துகின்றனர் என்பதை மறந்துவிடக் கூடாது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X