For Quick Alerts
For Daily Alerts
Just In
ஏப்.25ல் சென்னையில் டாஸ்மாக் ஊழியர்கள் பேரணி!
சேலம்: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25 ம் தேதி சென்னையில் பேரணி நடத்த டாஸ்மாக் ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து டாஸ்மாக் பணியாளர்கள் முன்னேற்ற சங்க சேலம் மாவட்ட தலைவர் ஜம்பு கூறியிருப்பதாவது:
டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும்.
பணியில் சேரும் போது டாஸ்மாக் ஊழியர்கள் செலுத்திய டெபாசிட் தொகைக்கு அரசு வழங்கும் 3 சதவீத வட்டியை 8.5 சதவீதமாக உயர்த்தி தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25 ம் தேதி அன்று சென்னையில் மாபெரும் பேரணி நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.