For Daily Alerts
Just In

'ஷஹீன்-2' ஏவுகணையை ஏவி பாகிஸ்தான் சோதனை
இஸ்லாமாபாத்: கண்டம் விட்டு கண்டம் பாயும், அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஹதீப்- 6 ஷஹீன்-2 ரக ஏவுகணையை ஏவி பாகிஸ்தான் சோதனை செய்தது.
2000 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள இலக்கைத் தாக்கக்கூடிய ஷஹீன்-2 ரக ஏவுகணையை பாகிஸ்தான் தயாரித்துள்ளது. இந்த வகை ஏவுகணைகள் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் படைத்தவை.
இந்த ஏவுகணையை, பாகிஸ்தான் விஞ்ஞானிகள், ரகசிய இடம் ஒன்றில் சோதித்துப் பார்த்துள்ளனர். சோதனை வெற்றிகரமாக இருந்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பிரதமர் யூசுப் ரஸா கிலானி, முப்படைத் தளபதி ஜெனரல் தாரிக் மஜீத், ராணுவ அமைச்சர் அகமது முக்தார் சோதனையை பார்வையிட்டனர்.
சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்காக, ஏவுகணை தயாரிப்பு குழுவினருக்கு பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
Comments
Story first published: Saturday, April 19, 2008, 16:12 [IST]