திருமணச் செய்தியில் உண்மை இல்லை - புடின் மறுப்பு
மாஸ்கோ: ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை அலினா கபயேவாவை நான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியாகியுள்ள செய்தியில் சிறிதளவும் உண்மை இல்லை என்று ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினும் மறுத்துள்ளார்.
மாஸ்கோவிலிருந்து வெளியாகும் மாஸ்கோவ்ஸ்கி கரஸ்பான்டென்ட் நாளிதழில், அதிபர் புடின், முன்னணி ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையும், மாடலுமான அலினா கபயேவாவை மணந்து கொள்ளப் போவதாக செய்தி வெளியாகியிருந்தது.
இதனால் கோபமடைந்த அலினா உடனடியாக இந்த செய்தியை மறுத்தார். மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் வழக்கு தொடருவேன் என அவர் மாஸ்கோவ்ஸ்கியை எச்சரித்தார். இதையடுத்து முதல் பக்கத்தில் இந்த செய்தி தவறானது, இதற்காக மன்னிப்பு கோருவதாக மாஸ்கோவ்ஸ்கி தெரிவித்தது.
இந்த நிலையில் மாஸ்கோவில் இத்தாலி பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள சில்வியோ பெர்லுஸ்கோனியுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் புடின் பேசுகையில், அந்த செய்தியில் ஒரு வார்த்தை கூட உண்மை இல்லை. அது வெறும் வதந்திதான் என்றார்.
புடினுடன் இணைத்துப் பேசப்பட்ட அலினா, ரஷ்ய ஆளுங்கட்சியான ஐக்கிய ரஷ்ய கட்சியின் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் அந்நாட்டு நாடாளுமன்ற கீழ் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் பதவியிலிருந்து புடின் விலகியவுடன் இக்கட்சியின் தலைவராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications