For Daily Alerts
Just In
மெல்போர்னில் மொட்டை போட்டு திபெத்தியர்கள் போராட்டம்
சிட்னி: மெல்போர்ன் நகரில் உள்ள சீன துணைத் தூதரகம் முன்பு 50க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களில் 12க்கும் மேற்பட்டோர் மொட்டை போட்டு நூதனப் போராட்டம் நடத்தினர்.
திபெத்தில் சீன அரசு நடத்தி வரும் மனித உரிமை மீறல்கள், அடக்குமுறைகளைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
50க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் மெல்போர்னில் உள்ள சீன துணைத் தூதரகம் முன்பு கூடி போராட்டம் நடத்தினர். அப்போது 12க்கும் மேற்பட்டோர் மொட்டை போட்டுக் கொண்டனர்.