For Daily Alerts
Just In
பெரும் விபத்திலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் தப்பியது
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தில் நேற்று பெரும் விரிசல் ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதி வழியாக கடக்கவிருந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.
கடும் வெப்ப நிலை காரணமாகவே இந்த விரிசல் ஏற்பட்டிருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒருவேளை இந்த விரிசல் விட்ட தண்டவாளத்தில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் போயிருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.