For Quick Alerts
For Daily Alerts
Just In

மதுரை மீனாட்சி கோயில் - மே 10ல் வைகாசி விழா
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைகாசி வசந்த விழா மே 10 தொடங்குகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவைத் தொடர்ந்து வைகாசி வசந்த விழா நடக்கிறது. மே 10ம் தேதி முதல் 19 ம் தேதி வரை வசந்த விழா உற்சவம் நடைபெறுகிறது. உற்சவத்தின்போது சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் திருஉலா ஆகியவை நடக்கும்.
திருஞான சம்பந்தர் சுவாமிகள் உற்சவம் மே 22ம் தேதி வரை நடைபெறும். இந்த விழாவை முன்னிட்டு தங்க ரத உலா, திருக்கல்யாணம், தங்க, வைரக் கீடம் சாத்துப்படி போன்றவைகள் நடைபெறாது என்று இணை கமிஷனர் ராஜா கூறினார்.
Comments
Story first published: Monday, April 28, 2008, 14:36 [IST]