For Daily Alerts
Just In
தமிழகத்தில் அனல் காற்று தொடரும்
சென்னை: தமிழகத்தை வெயிலும் அனல் காற்றும் கடந்த 2 தினங்களாக வருத்தெடுத்து வருகிறது. இந்நிலையில் அனல் காற்று அடுத்த 2 நாட்களுக்கு அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கத்திரி எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 3ம் தேதி தொடங்கியது. ஆனால் அதற்கு முன்னரே சென்னை உள்பட தமிழகத்தை வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியது.
இந்நிலையில் கடந்த 2 தினங்களாக வெயிலோடு அனல் காற்றும் வறுத்தெடுத்து வருகிறது.
இந்நிலையில் அனல் காற்று மேலும் 2 நாட்களுக்கு சற்று கூடுதலாகவே இருக்கும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் நாளை வெயில் 43 டிகிரி செல்சியசஸை தொடுமாம். கடற்கரை பகுதிகளில் அனல் காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும்.