For Daily Alerts
Just In
மதிமுக பஞ்சாயத்து தலைவருக்கு சரமாரி வெட்டு
சுரண்டை: மதிமுகவைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர் சரமாரியாக வெட்டப்பட்டார்.
சுரண்டை அருகே உள்ள ராஜாபாண்டியை சேர்ந்தவர் ஆறுமுகசாமி. மதிமுக கீழப்பாவூர் ஓன்றிய இளைஞரணி வடக்கு பகுதி செயலாளரான இவர் ராஜபாண்டி பஞ்சாயத்து தலைவராகவும் உள்ளார்.
இந் நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் பஸ் நிலையம் அருகே அவர் தனியே சென்றபோது அரிவாளுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை சாரமரியாக வெட்டியது.
இதில் பலத்த வெட்டுபட்ட ஆறுமுகசாமி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை உறவினர்கள் மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.