For Daily Alerts
Just In
28ம் தேதி எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்?
சென்னை: தமிழகத்தில் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வரும் 28ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது.
இம்முறை 7.99 லட்சம் மாணவ, மாணவியர் எஸ்எஸ்எல்சி தேர்வெழுதினர். சுமார் 1 லட்சம் பேர் மெட்ரிக்குலேசன் தேர்வு எழுதியுள் ளனர்.
இந் நிலையில் வரும் 28ம் தேதி (புதன்கிழமை) இந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.