காதல் பாடம்: ஆசிரியர்-ஆசிரியை 'எஸ்கேப்'!
குளித்தலை: காதலர்களான ஆசிரியரும், ஆசிரியையும் திருமணம் செய்து கொள்வதற்காக ஓடிப் போயினர். இதையடுத்து ஆசிரியரின் தந்தை கைது செய்யப்பட்டார்.
குளித்தலை அருகே அய்யர்மலையில் ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இங்கு சுதா (19), சந்தோஷ் (24) ஆகியோர் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தனர்.
இவர்களுக்கு காதல் மலர்ந்தது. மூன்று வருடமாக காதலித்து வந்தனர்.
இந் நிலையில் கடந்த 21ம் தேதி பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற கீதா வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது தந்தை தோகமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீஸ் விசாரணையில், கீதா-சந்தோஷ் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக ஓடிப் போனது தெரியவந்தது.
ஆனால், தனது மகளை சந்தோஷின் பெற்றோர்கள் முத்துலிங்கம், மலர்வாணி ஆகியோர் கடத்திவிட்டதாக கீதாவின் தந்தை புகார் தந்ததால் தந்தை முத்துலிங்கத்தை சப்-இன்ஸ்பெக்டர் செல்வி கைது செய்தார்.
சந்தோஷ், அவரது தாய் மலர்வாணி ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். கீதா மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.