ஆந்திர இடைத்தேர்தல்- தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதிக்கு பெரும் சரிவு
ஹைதராபாத்: ஆந்திராவின் தெலுங்கானா பகுதியில் நடந்த மக்களவை-சட்டமன்ற இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. இதில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இக் கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் கரீம்நகர் மக்களவைத் தொகுதியில் கடந்த தேர்தலை விட மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
தெலுங்கானா பகுதியில் உள்ள 4 நாடாளுமன்ற, 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று இடைத் தேர்தல் நடந்தது.
கடந்த மக்களவை-சட்டமன்றத் தேர்தல்களில் தனி தெலுங்கானா கோரி வரும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தான் இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.
ஆனால், தனி தெலுங்கானாவை உருவாக்குவதாக உறுதியளித்து இந்தக் கட்சியின் ஆதரவைப் பெற்று மத்தியில் ஆட்சியில் அமைந்த காங்கிரஸ் பின்னர் பல்டியடித்துவிட்டது. இதையடுத்து இக் கட்சியின் 4 எம்பிக்களும், 16 எம்எல்ஏக்களும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
மேலும் இரு தொகுதிகளில் ஒரு காங்கிரஸ், ஒரு தெலுங்கு தேசம் எம்எல்ஏ ஆகியோர் இறந்துவிட்டனர். இதையடுத்து அனைத்திற்கும் சேர்த்து கடந்த மாதம் 29ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது.
இந்த இடைத் தேர்லுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. இதில் கரீம் நகர் மக்களவை தொகுதியில் டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர் ராவ் மீண்டும் வெற்றி பெற்றார். அவரது கட்சி 5 சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்றியது. இரு இடங்களில் அக் கட்சி வேட்பாளர்களே முன்னணியில் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி 3 சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 3 இடங்களில் அந்தக் கட்சியே முன்னணியில் உள்ளது.
தெலுங்கு தேசம் 3 தொகுதிகளில் வென்றுள்ளது. மேலும் 3 சட்டமன்றத் தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.
டிஆர்எஸ், காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகியவை தலா ஒரு மக்களவைத் தொகுதியில் முன்னணியில் உள்ளன.
இதன் மூலம் டி.ஆர்.எஸ். தன் வசமிருந்த 5 எம்எல்ஏ தொகுதிகளை காங்கிரஸ், தெலுங்கு தேசத்துடன் இழந்துள்ளது.
மேலும் அக் கட்சியிடமிருந்த 4 எம்பி தொகுதிகளில் இரண்டை காங்கிரஸ், தெலுங்கு தேசம் ஆகியவை கைப்பற்றவுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications