மருத்துவமனைகளை நிறுவ இந்தியாவுக்கு ஓமன் அழைப்பு
Subscribe to Oneindia Tamil
துபாய்: இந்தியாவில் உள்ள மிகப்பெரிய தனியார் மருத்துவ நிறுவனங்கள் ஓமனிலும் மருத்துவமனைகளை அமைக்க முன் வர வேண்டும் என்று ஓமனுக்கான இந்திய தூதர் அனில் வாத்வாவிடம் அந்நாட்டு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓமனின் சலாஹா பகுதிக்கு சென்ற இந்தியத் தூதர் அனில் தலை மையிலான குழுவினர், பல்வேறு துறை அதிகாரிகளை சந்தித்துப் பேசினார்.
அப்போது, ஓமனில் உள்ள மருத்துவ நிறுவனங்களுடன் இணைந்து பெரிய மருத்துவமனைகளை அமைக்க இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனைகள் முன்வர வேண்டும். இதற்கு ஒத்துழைப்பு மற்றும் நிதி வசதி செய்துதர தயாராக இருப்பதாக ஓமன் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்சாரம், எரிவாயு மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications