ஒபாமாவுக்காக பிரசாரம் செய்ய பில் கிளின்டன் விருப்பம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் பாரக் ஒபாமாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார் முன்னாள் அதிபர் பில் கிளின்டன்.
வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கிறது. ஆளும் குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக்கைனும், ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும் போட்டியிடுகின்றனர்.
ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியில் முன்னாள் அதிபர் பில் கிளின்டன் மனைவி ஹிலாரியும் ஒபாமாவும் மோதினர். இதில் ஒபாமா அக்கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இருப்பினும் ஒபாமாவுக்கு ஆதரவாக ஹிலாரி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஒபாமாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார் முன்னாள் அதிபர் பில் கிளின்டன்.
இதுகுறித்து பில் கிளின்டன் கூறியதாவது: ஜனநாயக கட்சி வேட்பாளர் ஒபாமாவை ஆதரித்து பிரசாரம் செய்ய விரும்புகிறேன். அவர் என்னைவிட பிசியானவர். அவர் எப்போது கேட்டுக் கொள்கிறாரோ அப்போது பிரசாரம் செய்வேன். சில தினங்களுக்கு முன் அவரிடம் போன் மூலம் பேசினேன். அப்போது இதை தெரிவித்தேன் என்று கூறினார் கிளின்டன்.
ஜனநாயக கட்சியினர் மிகவும் மதிக்கும் தலைவராக கிளின்டன் உள்ளார். வேட்பாளர் போட்டியின்போது ஹிலாரி எந்த மாகாணங்களில் வெற்றி பெற்றாரோ அந்த பகுதிகளில் கிளின்டன் பிரசாரம் செய்தால் அக்கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்று கூறுகின்றனர் அரசியல் அறிஞர்கள். அடுத்த சில வாரங்களில் கிளின்டனும் ஒபாமாவும் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்வார்கள் என்று தெரிகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications