மாத இறுதியில் கோவை-நெல்லையில் அரசு கேபிள் டிவி
சென்னை: தஞ்சையைத் தொடர்ந்து கோவை மற்றும் நெல்லையில் அமைக்கப்பட்டு வரும் அரசு கேபிள் டிவி கட்டுப்பாட்டு மையங்கள் இம்மாத இறுதிக்குள் செயல்பட உள்ளது.
அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் மூலம் தமிழ்நாடு முழுவதும் வீடுகளுக்கு அரசு கேபிள் டி.வி. இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தஞ்சையில் அரசு கேபிள் டிவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த இணைப்பு பெறுகிறவர்களுக்கு ரூ.100க்கு மேல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டம் பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை மற்றும் நெல்லையில்...
இந்நிலையில் 2வது கட்டமாக கோவை மற்றும் நெல்லையில் அரசு கேபிள் டிவி கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட உள்ளன.
கோவையில் அமைக்கப்பட்டுள்ள அரசு கேபிள் டிவி கட்டுப்பாட்டு மையத்தில் கருவிகள் பொருத்தும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இது போல நெல்லை கட்டுப்பாட்டு மையத்தின் பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.
இன்னும் இரண்டு வாரங்களில் இந்த பணி முழுமை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த மாத இறுதிக்குள் கோவை, நெல்லை அரசு கேபிள் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட தொடங்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆரம்பத்தில் கோவை, நெல்லை, மதுரையிலும் தொடர்ந்து மற்ற நகரங்கள், கிராமங்களுக்கும் வீடு வீடாக அரசு கேபிள் டிவி இணைப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து வேலூரிலும் அடுத்து சென்னையிலும் அரசு கேபிள் டிவி கட்டுப்பாட்டு மையங்கள் தொடங்கப்படும். செப்டம்பர் மாதத்துக்குள் இந்த பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. அரசு கேபிள் டி.வி.க்கு மாறும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று அரசு கேபிள் டிவி நிறுவன மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் இருந்து வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இருந்து நவீன தொழில்நுட்பத்துடன் டிவி சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இதனால் ஒளிபரப்பு தெளிவாக இருக்கிறது. வழக்கமான சேனல்களுடன் ஜீ, பிபிசி, ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், இஎஸ்பிஎன், எச்பிஓ, போகோ, காட்டூன் நெட்ஒர்க், ஜீ சினிமா, டென்ஸ் ஸ்போர்ட்ஸ், ஜீ ஸ்போர்ட்ஸ், நியோஸ்போட்ஸ் போன்ற கட்டண சேனல்களும் அரசு கேபிள் டிவி மூலம் வழங்கப்படுகிறது.
வழக்கமான ஒரு சில கட்டண சேனல்கள் அரசு கேபிள் டிவியில் வரவில்லை என்ற குறைபாடு உள்ளது. என்றாலும் விரைவில் இந்த சேனல்களை வழங்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனவே விரைவில் முக்கிய சேனல்கள் அனைத்தும் அரசு கேபிள் டிவிக்கள் மூலம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications