ஒலிம்பிக்: சீன மக்களுக்கு தலாய் லாமா வாழ்த்து
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன மக்கள் குடியரசுக்கு எனது வாழ்த்துக்கள். போட்டி அமைப்பாளர்கள், ஒலம்பிக் போட்டியில் பங்கேற்கும் சீன வீரர்கள், வீராங்கனைகள் ஆகியோரையும் நான் வாழ்த்துகிறேன்.
ஒலிம்பிக் போட்டியை நடத்த விண்ணப்பம் அளித்தது முதல் நான் சீனாவை ஆதரித்து வந்துள்ளேன். ஒலிம்பிக் போட்டியை நடத்தும் தகுதி சீனாவுக்கு உள்ளது.
130 கோடி சீன மக்களுக்கு இது மிகவும் பெருமையான நேரம். ஒலிம்பிக் போட்டிகள் வெற்றிகரமாகவும், நல்லபடியாகவும் நடந்தேற நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியுள்ளார் தலாய் லாமா.












Click it and Unblock the Notifications