For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோல்மேன்: கைகொடுத்த வாரன் பஃபே-2 நாள் லாபம் ரூ. 3,000 கோடி

By Staff
Google Oneindia Tamil News

Warrenbuffett and Billgates
நியூயார்க்: அமெரிக்க பங்குச் சந்தையில் மிகப் பெரும் சக்திகளாகக் கருதப்படும் மார்கன் ஸ்டேலி, கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனங்களும் 'வெளியில் தெரியாத நெருக்கடி'களில் சிக்கித் தவிக்கின்றன.

இந்த நெருக்கடிகள் வெளிப்பட்டு, அமெரிக்கப் பொருளாதாரம் மேலும் தள்ளாடாமல் இருக்க மார்கன் ஸ்டேன்லிக்கும், கோல்ட்மெனுக்கும் உதவிக் கரம் நீட்டியுள்ளது அமெரிக்க ரிசர்வ் வங்கி. தற்போது அரசு முடிவு செய்துள்ள 700 பில்லியன் டாலர் நிதியுதவித் திட்டத்தில் இவ்விரு வங்கிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

அமெரிக்க ரிசர்வ் வங்கி இதுகுறித்து சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மார்கன் ஸ்டேன்லி, கேல்ட்மென் சாக்ஸ் ஆகிய முன்னணி நிதி நிறுவனங்களின் ரொக்க புழக்கம் மற்றும் வர்த்தக அளவை மேலும் அதிகரிக்கவும், தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான சூழலிலிருந்து இவ்விரு நிறுவனங்களும் மீண்டு வரவும் இந்த உதவி அள்க்கப்படுவதாகக் கூறியுள்ளது.

இவ்விரு நிதி அமைப்புகளின் பங்குகள் மற்றும் அசையா சொத்துகளைப் பிணையமாகக் கொண்டுதான் ரிசர்வ் வங்கி இந்த கடன் வசதியை வழங்குகிறது.

கோல்மேனில் வாரன் பஃபேயின் முதலீடு!

இந்த நெருக்கடியான சூழலில் கோல்ட்மென் சாக்ஸ் வங்கிக்கு ஒரு இனிய அதிரிச்சியைத் தந்துள்ளார் உலகின் முன்னணி முதலீட்டாரும் உலகின் முதல் 3 பணக்காரர்களில் ஒருவருமான வாரன் பஃபே. அதாவது கோல்ட்மேன் வங்கியில் 5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளார்.

எல்லாம் காரணத்தோடுதான் இந்த முடிவை எடுத்துள்ளார் வாரன்.

அமெரிக்கப் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் வால் ஸ்ட்ரீட் நிலைமை படு தள்ளாட்டத்தில் இருக்கும் தருவாயில் நல்ல நிறுவனத்தின் பங்குகளை வாங்கிப் போட்டால் பின்னர் விலை எகிறும்போது பெரிய லாபம் பார்க்கலாம் என்ற கணக்கில்தான் வாரன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் வாரன் பபே.

பபேயின் இந்த முதலீடு அமெரிக்க பங்கு வர்த்தகர்த்தகர்கள் இடையே புதிய நம்பிக்கையை ஊட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோல்ட்மேன் வங்கியின் பங்குகள் இதுவரை பிரிமியம் பங்குகளாக இருந்து வந்தன. ஆனால் நிதிநெருக்கடி காரணமாக தற்போது இந்தப் பங்குகளின் விலை பாதிக்கும் மேல் குறைந்துவிட்டன.

இதுவரை 250.70 டாலர்களாக இருந்த கோல்ட்மேனின் ஒரு பங்கின் விலை, தற்போது கடந்த ஒராண்டு காலத்தில் இல்லாத அளவு கிடுகிடுவென சரிந்து 115 டாலருக்கு வந்துவிட்டது.

இன்றைய மோசமான சூழலில் வாரன் எடுத்துள்ள மிகப்பெரிய ரிஸ்க் இது என நிதி நிறுவனங்கல் வர்ணித்தாலும், அமெரிக்கப் பொருளாதாரம் சீராகத் துவங்கினால் மிகப்பெரிய லாபத்தை வாரன் பெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறுகிறார்கள் சர்வதேச பொருளியல் நிபுணர்கள்.

வாரன் ப்ஃபேயின் நிறுவனம் விவரமான நிறுவனம். அதனால்தான் அமெரிக்க ரிசர்வ் வங்கி நிதி உதவிப வழங்கப் போவதை முன் கூட்டியே அறிந்து கோல்ட்மேனின் பங்குகளை வளைத்துப் போடுகிறது. நிச்சயம் இது தவறான முதலீடு அல்ல... உலகின் பாதுகாப்பான நிறுவனம் ஒன்றின் பாதுகாப்பான பங்குகளைத்தான் வாங்குகிறது..., என்கிறார் பிரபல பங்குச் சந்தை வல்லுநர் ஜெஃப் மாத்யூ.

இதை உறுதிப்படுத்தும் வித்தில், அமெரிக்க அரசின் உதவி அறிவிப்பு மற்றும் வாரனின் முதலீட்டு அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, கோல்ட்மேனின் ஒரு பங்கு விலை 18 டாலர்கள் உயர்ந்துவிட்டது. இப்போது கோல்ட்மேன் ஒரு பங்கு விலை 133 டாலர்.

அதாவது இரண்டே நாளில் வாரன் நிறுவனத்துக்கு ஒரு பங்குக்கு தலா 18 டாலர் லாபம் கிடைத்துவிட்டது. 115 டாலருக்கு 18 டாலர் லாபம் என்றால், 5 பில்லியன் டாலருக்கு எவ்வளவு லாபம் என கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். ரூபாயில் சொன்னால் ரூ. 23,000 கோடி முதலீட்டுக்கு இரண்டே நாளில் கிட்டத்தட்ட ரூ. 3,600 கோடி லாபம்!!.

தனது பெரும்பாலான சொத்துக்களை பில்கேட்ஸ்-மெலின்டா கேட்சின் அறக்கட்டளைக்குத் தந்துவிட்டர் வாரன் பபே என்பது குறிப்பிடத்தக்கது.

உலகப் பணக்காரர் வரிசையில் இடம் பெற்றுள்ள இவருக்கு பிடிக்காத விஷயங்கள் கிரெடிட் கார்டும், செல்போனுமாம். மேலும் லேப் டாப்பைக் கூட இவர் பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X