For Daily Alerts
Just In
பொய் வழக்கு-வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
துறையூர்: திருச்சி மாவட்டத்தில் வழக்கறிஞர் மீது போலீஸார் பொய் வழக்கு செய்துள்ளதை கண்டித்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் முருகேசன். இவர் மீது ஒரு சம்பவம் தொடர்பாக முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று துறையூர் வக்கீல்கள் போர்க்கொடி உயர்த்தினர். துறையூர் வழக்கறிஞர்களின் கோரிக்கையை ஆதரித்து, முசிறி மற்றும் திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி கடந்த இரண்டு தினங்களாக நீதிமன்ற புறக்கணிப்பிலும் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர். இதனால் வழக்கறிஞர்கள், மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.