லாரி கவிழ்ந்து ரூ.3 லட்சம் முட்டைகள் நாசம்
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: முட்டை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்ததில் லாரியில் இருந்த ரூ 3 லட்சம் மதிப்புள்ள முட்டைகள் உடைந்து நாசமானது.
நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு ஒரு லாரி முட்டை ஏற்றிச் சென்றது. விழுப்புரம் மாவட்டம், விக்ரவாண்டி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த வாகனத்துக்கு வழிவிட முயன்றபோது முட்டை லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அப்போது லாரியில் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள 36,000 முட்டைகள் உடைந்து நாசமானது. உடைந்த முட்டைகளை அருகில் உள்ள கிராம மக்கள் வந்து அள்ளிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications