For Daily Alerts
Just In
காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் நீண்ட போராட்டத்துக்கு பிறகு சுட்டு கொன்றனர். தீவிரவாதியிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காஷ்மீர் மாவட்டம் ரஜோரி மாவட்டத்தைச் சேர்ந்த தீவிரவாதி அப்ரார் அகமது. ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பின் செயல்பட்டு வந்த அப்ரார் பின்னர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பில் இணைந்து ரஜோரி மாவட்ட தீவிரவாதக் குழுவின் தலைவராக செயல்பட்டு வந்தார்.
வடக்கு ஜம்முவில் உள்ள தர்காய்ன் மலைப் பகுதியில் போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் நேற்று பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் அப்ரார் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவனிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி உள்பட ஏராளமான ஆயுதங்களும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.