For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீபாவளி: மதுரை, கோவை, திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளி கூட்ட நெரிசலை முன்னிட்டு சென்னையிலிருந்து மதுரை, கோவை, திருச்சி, எர்ணாகுளம் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் - மதுரை இடையிலான சிறப்பு ரயில் அக்டோபர் 26ம் தேதி எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இரவு 11.45 மணிக்கு புறப்படும். மதுரையை அடுத்த நாள் காலை 9.15 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் 27ம் தேதி இரவு 6 மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பி காலை 4.30 மணிக்கு எழும்பூருக்கு வந்து சேரும்.

திருச்சி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் அக்டோபர் 25ம் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு எழும்பூரை அன்று இரவு 9.30 மணிக்கு வந்தடையும்.

சென்னை எழும்பூர் - திருச்சி சிறப்பு ரயில் 25ம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 6.15 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

திருச்சி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் 26ம் தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 10.15 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.

சென்னை எழும்பூர் - திருச்சி சிறப்பு ரயில் 27ம் தேதி மாலை 3.15 மணிக்கு கிளம்பி, திருச்சியை இரவு 9.15 மணிக்கு சென்றடையும்.

சென்னை சென்டிரல் - கோவை சிறப்பு ரயில், 23ம் தேதி இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 7 மணிக்கு கோவையை சென்றடையும்.

கோவை - சென்னை சென்டிரல் சிறப்பு ரயில், 24ம் தேதி இரவு 11.45 மணிக்கு புறப்பட்டுஅடுத்த நாள் காலை 8.30 மணிக்கு சென்னையை வந்தடையும்.

எர்ணாகுளம் - சென்னை சென்டிரல் சிறப்பு ரயில் அக்டோபர் 27ம் தேதி மாலை 5 மணிக்கு கிளம்பி, அடுத்த நாள் காலை 5.15 மணிக்கு சென்னையை வந்தடையும்.

சென்னை சென்டிரல் - எர்ணாகுளம் இடையிலான சிறப்பு ரயில், அக்டோபர் 28ம் தேதி மாலை 5 மணிக்கு கிளம்பி, அடுத்த நாள் காலை 4.30 மணிக்கு எர்ணாகுளத்தை சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X