ஒபாமாவின் ஆலோசனை குழுவில் இன்னொரு இந்தியர்

Subscribe to Oneindia Tamil

Anjan Mukherjee
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றவுள்ள பராக் ஒபாமா தனது ஆலோசகராக மேலும் ஒரு இந்தியரை நியமித்துள்ளார்.

ஏற்கனவே சோனால் ஷா, ப்ரீத்தா பன்சால் ஆகியோரை தனது ஆலோசனைக் குழுவில் இடம் பெறச் செய்துள்ள ஒபாமா அடுத்ததாக அன்ஜான் முகர்ஜி என்ற இந்தியரையும் தனது 15 பேர் கொண்ட குழுவில் சேர்த்துக் கொண்டுள்ளார்.

இவர் அமெரிக்காவின் முன்னணி நிதி முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோனின் நிர்வாக இயக்குனராக உள்ளார். இவர் ஒபாமாவுக்கு பொருளாதாரம் மற்றும் சர்வதேச வர்த்தகம் குறித்த ஆலோசனைகளைத் தரவுள்ளார்.

இவர் தவிர நிகோலஸ் ரத்தோட் என்ற இந்தியருக்கும் வெள்ளை மாளிகையில் மிக முக்கியப் பொறுப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

அமெரிக்காவில் சுமார் 30 லட்சம் இந்தியர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+