லதா அதியமானுடன் சென்னை விரைகிறார் அழகிரி - பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு
மதுரை: திருமங்கலத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்ற கையோடு வேட்பாளர் லதா அதியமானுடன், திருமங்கலம் தொகுதி திமுக தேர்தல் பணிக்குழுத் தலைவர் மு.க.அழகிரி சென்னை வருகிறார். அவருக்கு அண்ணா அறிவாலயத்தில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க திமுகவினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
திருமங்கலம் தொகுதி தேர்தல் பணிக்குழுத் தலைவராக செயல்பட்டவர் அழகிரி. கடந்த இடைத் தேர்தல்களிலும் அவரது தலைமையில்தான் திமுக கூட்டணி வெற்றிகளை ஈட்டியது.
ஆரம்பத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதில் சுணக்கம் காட்டினாலும் கூட பின்னர் முழு வீச்சில் தனது ஸ்டைல் தேர்தல் பிரசாரத்தை முடுக்கி விட்டார் அழகிரி.
அவரது அயராத முயற்சிகள் மற்றும் உழைப்பால் தற்போது திமுகவுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. மேலும், அதிமுக கூட்டணியிடமிருந்து தொகுதியும் திமுக தரப்புக்கு மாறி வந்துள்ளது.
மதுரையில் தடபுடல் கொண்டாட்டம் ...
மதுரையில் திமுக தொண்டர்கள் நேற்றே கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டனர்.
ஹாட்ரிக் வெற்றி என்ற டிஜிட்டல் பலகைகளும், அழகிரியின் புன்னகை முகத்துடன் கூடிய போஸ்டர்களும் மதுரை நகரை அலங்கரித்தன.
இன்று வெற்றி செய்தி வந்ததும் மதுரையின் பல்வேறு பகுதிகளிலும் அழகிரியின் ஆதரவாளர்களும், திமுகவினரும் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
வெற்றி பெற்ற வேட்பாளர் லதா அதியமானுடன் மு.க.அழகிரி இன்று மாலை சென்னை வருகிறார். முதல்வர் கருணாநிதியை சந்திக்கிறார்.
வெற்றி முகத்துடன் வரும் அழகிரியை வரவேற்க சென்னை திமுகவினர் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனராம். அறிவாலயத்தில் பட்டாசுகள் முழங்க அவரை வரவேற்க திட்டமிட்டுள்ளனராம்.
மாநிலம் முழுக்க கொண்டாட்டம் ..
இதற்கிடையே, திமுகவின் திருமங்கலம் வெற்றியை தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
சென்னையில் மேயர் மா.சுப்ரமணியம் தலைமையில் தொண்டர்கள் இனிப்புகளைக் கொடுத்தும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர்.
அண்ணா அறிவாலய வளாகத்தில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர்.
அதேபோல சிவகங்கை, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications