For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக பட்ஜெட்: 2009-10 துளிகள்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்..

- மின் கட்டணம் உயர்வில்லை
- பஸ் கட்டணம் உயர்வில்லை
- மிளகு, சீரகம் ஆகியவற்றுக்கு வரி விலக்கு
- பருப்பு, பயிறு, பட்டாணிகளுக்கு கொள்முதல் வரி விலக்கு
- கையினால் தயாரிக்கப்படும் இரும்புப் பெட்டிகளுக்கு முழு வரி விலக்கு
- கையினால் தயாரிக்கப்படும் தகர டின்களுக்கு முழு வரி விலக்கு
- கையினால் தயாரிக்கப்படும் இரும்புப் பெட்டகங்களுக்கு 4 சதவீதமாக வரிக் குறைப்பு.
- உலர்ந்த திராட்சக்கு 4 சதவீதமாக வரிக் குறைப்பு
- ஊறுகாய் மீது 4 சதவீதமாக வரிக் குறைப்பு
- எம்பி3, ஐபாடுகளுக்கு 4 சதவீதமாக வரிக் குறைப்பு
- செங்கல் சூளைகளின் அடுப்புகளுக்கேற்ப வரி விதிப்பு
- ஓய்வூதியதாரர்களின் மனைவி அல்லது கணவர் நோய்வாய்ப்படும்போது மருத்துவ செலவை அரசே வழங்கும்.
- 10,000 முஸ்லீம் இளைஞர்களுக்கு ரூ. 30 கோடியில் கடனுதவி
- உலமாக்கள், பணியாளர்கள் நலனுக்கு தனி நல வாரியம்
- பிற்படுத்தப்பட்ட மாணவர் உதவித் கொகைக்காக ரூ. 82 கோடி
- சென்னை மாநகராட்சி, 9 நகராட்சிகளுக்கு ரூ. 6.03 கோடியில் சாக்கடை அடைப்பு அகற்றும் இயந்திரங்கள்
- ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ. 61 கோடி
- ரூ. 25 கோடியில் எஸ்.சி, எஸ்.டி இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு, சிறப்புப் பயிற்சி
- சிறு வணிகர்களுக்காக தனி நல வாரியம்
- ஓய்வு பெற்ற பத்திரிக்கையாளர் ஓய்வூதியம், குடும்பத்தினர் குழ ஓய்வூதியம் உயர்வு
- பத்திரிக்கையாளர்களுக்கு சென்னை, வேலூர், திண்டுக்கல், திருச்சியில் சலுகை விலையில் வீட்டு மனை.
- தேங்காய்ப்பட்டணத்தில் ரூ. 40 கோடியில் மீன் பிடி துறைமுகம்
- மீனவர் நல நிதி, நிவாரண நிதிக்கு ரூ. 42 கோடி
- அரவாணிகளுக்கு ரூ. 1 கோடியில் தொகுப்பு வீடுகள்
- சென்னையில் ரூ. 112 கோடியில் முதியோருக்கான சிகிச்சைக்கென தனி மையம்
- வரும் நிதியாண்டில் 50,000 புதிய மகளிர் சுய நிதிக் குழுக்கள்
- வருவாய்த்துறைக்கு ரூ. 2416 கோடி
- மகப்பேறு கால நிதியுதவி பெற ரேஷன் சான்று தேவையில்லை. கிராம மருத்துவர்கள், செவிலியர்களின் சான்று போதும்.
- மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழான நிதியுதவி ரூ. 20,000 ஆக உயர்வு
- ரூ. 140 கோடியில், 6 லட்சம் இலவச எரிவாயு இணைப்புகள், அடுப்புகள்
- புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரூ. 2 ஆக குறைப்பு
- நன்செய் நிலங்களுக்கான நிலவரி ரூ. 5 ஆக குறைப்பு
- விவசாயிகளுக்கு தலவரி, மேல் வரி இனி கிடையாது.
- தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் ரூ. 1809 கோடியில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும.
- நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 3331 பணிகள் நிறைவேற்றம்
- இத்திட்டத்திற்கான அரசு நிதியாக ரூ. 50 கோடி ஒதுக்கீடு
- ரூ. 75 கோடியில் 29 புதிய சமத்துவபுரங்கள்
- அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் அடிப்படைத் தேவை கட்டமைப்புக்கு ரூ. 59 கோடி
- கிராமங்களில் 1,30,000 புதிய கான்க்ரீட் வீடுகள்
- நகர்ப்புறங்களில் ரூ. 441 கோடியில் 21,000 குடியிருப்புகள்
- 8000 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ. 700 கோடியில் குடிநீர்த் திட்டம்
- 30 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் நிறைவேற்றப்படும்
- 50 நகரங்களுக்கான குடிநீர் மேம்பாட்டுத் திட்டம்
- ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ரூ. 200 கோடி நிதி
- சென்னை-திருச்சி, சென்னை-பெங்களூர், சென்னை-கொல்கத்தா சாலைகளை இணைக்க வெளிவட்டச் சாலை
- இத்திட்டம் ரூ. 852 கோடியில் நிறைவேற்றப்படும்.
- திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ. 100 கோடி ஒதுக்கீடு.
- கிழக்குக் கடற்கரைச் சாலையில், மீதமுள்ள தூத்துக்குடி - கன்னியாகுமரி நெடுஞ்சாலை ரூ. 190 கோடியில் 2 வழித் தடமாக்கப்படும்.
- சாலை மேம்பாட்டுக்கு ரூ. 3087 கோடி
- சாலை பராமரிப்புக்கு ரூ 880 கோடி
- 25 லட்சம் கலர் டிவி வழங்கிட ரூ. 500 கோடி
- பின்தங்கிய பகுதிகளில் அமையும் தொழிற்சாலைகளுக்கு ரூ. 30 கோடி மானியம்
- தொழிற் பூங்காக்களில் திறன் மேம்பாட்டு மையங்கள்
- திருப்பூர்,ஸ்ரீபெரும்புதூரில், தொழிலாளர்கள் தங்க ரூ. 10 கோடியில் விடுதிகள்
- கங்கைகொண்டான், நிலக்கோட்டையில் டயர் உற்பத்தி தொழிற்சாலைகள்
- சுகாதாரத் துறைக்கு ரூ. 3391 கோடி
- அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் வாங்க ரூ. 264 கோடி
- ரூ. 150 கோடியில் தோப்பூரில் மதுரை அரசு மருத்துவமனையின் சிறப்புப் பிரிவு அமைக்கப்படும்.
- இதற்குத் தேவையான நிலம் இலவசமாக அளிக்கப்படும். மேலும் தமிழக அரசின் சார்பில் ரூ.25 கோடி நிதி வழங்கப்படும்
- சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு ரூ. 5 கோடியில் எம்ஆர்ஐ கருவி
- சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு ரூ. 4 கோடியில் கேட்ராக்ட் கருவி
- அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் கருவிகள் வாங்க ரூ. 53 கோடி
- தமிழ் வழி மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து
- ரூ. 58 கோடியில் மாணவர்களுக்கு இலவச சீருடை
- இடைநிலைக் கல்வித் திட்டத்திற்கு ரூ. 200 கோடி
- புதிய அரசு, கலை அறிவியல் கல்லூரிகள் நிறுவப்படும்.
- அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இளங்கலை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து
- உயர் கல்வித்துறைக்கு ரூ. 1465 கோடி
- பார்வைக் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு ரூ. 5 கோடியி்ல் இலவச மூக்குக் கண்ணாடிகள்
- 5000 பள்ளிகளை மேம்படுத்த ரூ. 85 கோடி
- ரூ. 820 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.
- தமிழகத்தில் வரும் நிதியாண்டில் 100 நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
- 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல் நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
- ஓமந்தூரார் அரசினர் வளாகத்தில் புதிய சட்டமன்ற கட்டுமானப் பணிக்கு ரூ. 200 கோடி
- 56 மாலை நீதிமன்றங்கள் அமைக்கப்படும்
- சென்னையில் ரூ. 1448 கோடியில் வெள்ளத் தடுப்புத் திட்டம்
- ஒட்டன்சத்திரத்தில் ரூ. 7 கோடியில் அணை
- ரூ. 2000 கோடிக்கு பயிர்க்கடன்
- கரும்புக்கு ஆதார விலை டன்னுக்கு ரூ. 1200
- வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிலவரி ரத்து
- மகளிர் சுய நிதி குழுக்களுக்கு 5000 உயர் கலப்பின மாடுகள்
- மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ. 200 கோடி
- இலங்கை அகதிகள் மறு வாழ்வுக்கு ரூ. 5 கோடி
- ஊனமுற்றோருக்கு மோட்டார் தையல் இயந்திரம் வழங்கப்படும்.
- காவல் துறைக்கு ரூ.2855 கோடி ஒதுக்கீடு. காவலர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் காலியிடங்களை நிரப்ப டி.ஜி.பி க்கு அதிகாரம்
- சென்னை மத்திய சிறைச்சாலை இருந்த இடத்தில் ரூ.70 கோடி செலவில் மருத்துவமனை விரிவாக்கம்
- விவசாயத்திற்கு தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்
- வரும் நிதியாண்டில் 68 லட்சம் கால்நடைகள் பயன்பெறும் வகையில் 5,500 கால்நடை முகாம்கள் நடத்தப்படும்.
- கூட்டுறவு கடனை உரிய காலத்தில் செலுத்தினால் வட்டி கிடையாது
- மதுரையில் ரூ. 12 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்புத் திட்டம் அமல்
- 2500 நடுநிலைப்பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் வழங்க ரூ. 50 கோடி
- தேசிய தோட்டக்கலை திட்டத்திற்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு
-நெய்க்கு தற்போது விதிக்கப்படும் 12.5 சதவிகித வரி 4 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது.
-சலவை தண்ணீர், குண்டூசி, ஊக்கு, ஜெம் கிளிப்கள் உள்ளிட்ட கிளிப்கள், ரப்பர்பேண்ட், ஸ்டாப்லர்பின் ஆகியவற்றுக்கும் 12.5 சதவிகித வரி 4 சதவிகிதமாக குறைக்கப்படும்.
-ஜவ்வரிசிக்கு விதிக்கப்படும் 2 சதவிகித வரி 1சதவிகிதமாக குறைக்கப்படுகிறது.
-2009-10ம் ஆண்டில் மொத்த வருவாய் வரவுகள் - ரூ. 58,270.93 கோடி.
-வருவாய் செலவினங்கள் ரூ.59,295.28 கோடி.
-நிகர கடன்கள் மற்றும் முன்பணங்கள் உள்ளிட்ட அரசின் மூலதன செலவு ரூ.10,799.30 கோடி.
-வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.1,024.34 கோடி.
-நிதி பற்றாக்குறை ரூ.1,823.64 கோடி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X