மக்களவை தொகுதி அறிமுகம்-31: சிவகங்கை

இந்தத் தொகுதியில் 6 முறை வெற்றி பெற்று எம்.பி ஆகியுள்ளார் ப.சிதம்பரம். இத்தொகுதியின் மூலமாக மத்திய அமைச்சரவையில் இடம் பெறும் வாய்ப்பையும் பெற்றார் ப.சிதம்பரம். ஆரம்பத்தில் நிதித்துறை இணை அமைச்சராக இருந்தார். பின்னர் கேபினட் அமைச்சராக உயர்ந்தார். தற்போது உள்துறை அமைச்சராக இருக்கிறார்.
சிதம்பரத்திற்கு மட்டுமல்லாமல், காங்கிரஸுக்கும் அசைக்க முடியாத கோட்டையாக திகழ்கிறது சிவகங்கை.
முன்பு இத்தொகுதியில், திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையாங்குடி, சிவகங்கை ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.
தற்போது தொகுதி மறு சீரமைப்பின்படி, திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
இவற்றில் திருமயம், ஆலங்குடி ஆகியவை புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவை. இளையாங்குடி, திருவாடானை ஆகியவை வெளியேறியுள்ளன.
சட்டசபைத் தொகுதிகளைப் பொறுத்தமட்டில், திருமயத்தில்
காங்கிரஸின் சுப்புராம், ஆலங்குடியில் சிபிஐயின் ராஜசேகரன், காரைக்குடியில் காங்கிரஸின் சுந்தரம், திருப்பத்தூரில் திமுகவின் பெரியகருப்பன், சிவகங்கையில், சிபிஐயின் குணசேகரன், மானாமதுரையில், அதிமுகவின் குணசேகரன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதுவரை எம்.பி. ஆக இருந்தவர்கள்
1967-71 - தா.கிருட்டிணன் - திமுக.
1971-77 - தா.கிருட்டிணன் - திமுக.
1977-80 - பெரியசாமி தியாகராஜன் - அதிமுக.
1980-84 - ஆர்.வி.சுவாமிநாதன் - காங்.
1984-89 - ப.சிதம்பரம் - காங்.
1989-91 - ப.சிதம்பரம் - காங்.
1991-96 - ப.சிதம்பரம் - காங்.
1996-98 - ப.சிதம்பரம் - தமாகா.
1998-99 - ப.சிதம்பரம் - தமாகா.
1999-04 - சுதர்சன நாச்சியப்பன் - காங்.
2004 - ப.சிதம்பரம் - காங்.
கடந்த தேர்தல் நிலவரம்
ப.சிதம்பரம் (காங்.) - 4,00,393
கருப்பையா (அதிமுக) - 2,37,668
வெற்றி வித்தியாசம் - 1,62,725 வாக்குகள்.
-
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
தென் மண்டலத்திற்கு திமுக பக்கா ஸ்கெட்ச்.. களமிறங்கிய ஓ.பன்னீர்செல்வம்.. பிரச்சாரத்தை தொடங்கினார் -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
2026 சட்டமன்றத் தேர்தல்: 'தொண்டை கட்டியிருக்கு...' - கனிமொழியின் அந்தப் பதில்! என்னதான் நடக்கிறது? -
Velmurugan's TVK: எதே! 10 சீட்டா? வேல்முருகனின் "பிளானால்" அதிர்ந்த திமுக! கடைசியில் சொன்னது என்ன? -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ்












Click it and Unblock the Notifications