For Daily Alerts
Just In
மும்பையில் பெய்த கன மழையால் மக்கள் குஷி
மும்பை: மும்பையிலும் அருகாமையில் உள்ள தானேவிலும் பலத்த மழை கொட்டியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து 2வது நாளாக மும்பையிலும் சுற்றுப் புறங்களிலும் பெரு மழை பெய்துள்ளது.
மும்பைப் புறநகர்களில் மழை கொட்டித் தீர்த்ததை மக்கள் ஆரத்தி எடுத்தும், பூஜைகள் நடத்தியும் கொண்டாடியதைக் காண முடிந்தது.
பரேல், லால்பாக், மாதுங்கா, குர்லா, கட்கோபர், மிலன், கோரேகான் ஆகிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
கன மழையால் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கிக் கிடந்ததால், ரயில் போக்குவரத்தும், சாலைகளில் தண்ணீர் ஓடியதால் பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.