இந்தோனேஷியா-2 ஹோட்டல்களில் குண்டு வெடித்து 9 பேர் பலி
ஜகார்தா: இந்தோனேஷியத் தலைநகர் ஜகார்தாவில் இன்று இரு நட்சத்திர ஹோட்டல்கள் அடுத்தடுத்து பயங்கர குண்டுகள் வெடித்தன. இதில் நியூசிலாந்தைச் சேர்ந்ச சுற்றுலாப் பயணிகள் உள்பட 9 பேர் பலியாயினர். மேலும் 13 வெளிநாட்டவர் உள்பட 50க்கும் மேற்ப்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜகார்தாவின் மிகப் பிரபலமான ரிட்ஸ்-கார்ல்டன், மேரியட் ஆகிய ஹோட்டல்களில் இன்று இந்த குண்டுகள் வெடித்தன. இரண்டுமே அருகருகே அமைந்துள்ள ஹோட்டல்களாகும்.
முதலில் மேரியட் ஹோட்டலிலும் அடுத்த 5 நிமிடத்தில் ரிட்ஸ் ஹோட்டலிலும் இந்த குண்டுகள் வெடித்தன. மேரியட் ஹோட்டல் மீது 2003ம் ஆண்டிலும் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. அதில் 12 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு ஹோட்டல்களிலும் பெரும்பாலும் வெளிநாட்டினரே தங்குவது வழக்கம். எனவே அவர்களைக் குறி வைத்தே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஜெமா இஸ்லாமிய என்ற தீவிரவாத அமைப்பு தான் இத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. 2002ல் இந்தேனேஷியாவின் பாலி தீவில் இந்த அமைப்பு நடத்திய பயங்கர மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 88 ஆஸ்திரேலியர்கள் உள்பட 200க்கும் மேப்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
தொடர்பான வீடியோ:
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications