தமிழீழ அரசு-நாடு வாரியான செயற் குழுக்கள் அறிவிப்பு

இது தொடர்ராக நாடு கடந்த தமிழீழ அரசின் செயற் குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழீழ மக்களின் அரசியல் வேட்கையினை உயிர்ப்புடன் பேணி, தமிழர் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் எனும் அடிப்படை உரிமைக் கோட்பாடுகளின் வழியாக- தமிழீழ மக்களின் சுதந்திரத்தினையும் இறைமையினையும் ஜனநாயக ரீதியில் வென்றெடுப்பதற்கான நிறுவனமாக நாடு கடந்த தமிழீழ அரசினை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருவதனை நீங்கள் அறிவீர்கள்.
இந்த முயற்சி நாள்தோறும் முன்னேற்றம் கண்டு வருவதை மகிழ்வுடன் வெளிப்படுத்த விரும்புகிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசினை உருவாக்குவதற்கான நடைமுறையில் நாடு வாரியான செயற்பாட்டுக் குழுக்கள் (Countrywise Working Groups- CWGs) உருவாக்கப்பட்டு, இக் குழுக்களின் ஊடாக ஒவ்வாரு நாடுகளிலும் நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான செயற்பாடுகளை விரிவுபடுத்தவுள்ளதை ஏற்கனவே அறிவித்திருந்தோம்.
இந்த அடிப்படையில், முதல் கட்டமாக கனடா, பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, நார்வே ஆகிய நாடுகளுக்கான செயற் குழு விபரங்களை அறியத் தருகிறோம்.
பிற நாடுகளின் செயற்பாட்டுக் குழு விபரங்களும் விரைவில் வெளியிடப்படும். தேவையேற்படும் பட்சத்தில் நாடுகளின் தேவைக்கு இணங்க செயற்பாட்டுக் குழுக்கள் விரிவாக்கம் செய்யப்படும்.
நாடு வாரியான இந்த செயற்பாட்டுக் குழுக்கள் சுயமான குழுக்களாகும். தத்தமது நாடுகளில் நாடு கடந்த அரசுக்கான தேர்தல்களை மக்கள் மத்தியில் நடத்தி அரசு அமையும் வரையில் மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்துப் பணிகளையும் இக்குழுக்கள் ஒருங்கிணைத்து மேற்கொள்ளும்.
நாடு கடந்த அரசை அமைக்கும் பணி நிறைவுறும்போது இக்குழுக்குள் தமது பணிகளை நிறைவுக்குக் கொண்டு வரும்.
நாடு வாரியான குழு உறுப்பினர் விபரம்:
கனடா:
அருணாச்சலம் அருந்தவராஜா
இராஜரட்ணம் குணநாதன்
மேலின் இமானுவேல்
சகாப்தன் யேசுதாசன்
தெய்வேந்திரன் கந்தையா
சுரேன் மகேந்திரன்
ஆரணி முருகானந்தம்
மோகன் நடராஜா
கல்பனா நாகேந்திரா
பிரியந்த் நல்லரட்ணம்
ரதி பரமசாமி
திவாகர் பரம்சோதி
மயூரன் பத்மநாதன்
அன்ரன் S. பிலிப்
சுப்பிரமணியம் இராஜரட்ணம்
இரவிகரன் இராஜரட்ணம்
றோய் ரட்ணவேல்
கிருஸ்ணா சரவணமுத்து
நீதன் சண்முகராஜா
சிவசோதி சிவஞானம்
Dr. ராம் சிவலிங்கம்
Tam சிவதாசன்
வைரமுத்து சொர்ணலிங்கம்
Dr. R. சிறிறஞ்சன்
வேலுப்பிள்ளை தங்கவேலு
ராஜ் தவராஜா
சாள்ஸ் தேவசகாயம்
இராகுலன் தியாகராஜா
வீரகத்திப்பிள்ளை விஜேந்திரா
பிரித்தானியா:
சிவகுமாரன் ஆனந்தவேல்
விஜய் ஜெயந்தன்
தில்லையம்பலம் ஜெயதரன்
வாசுகி கருணாநிதி
குணாளன் மாணிக்கவாசகம்
தம்பிப்பிள்ளை மன்மதராஜா
விவேகானந்தா நாகலிங்கம்
Dr. இரட்ணகுமாரி புஸ்பராஜா
விஜயா ரட்ணம்
அபர்ணா சஞ்ஜீவ்
Dr. அகிலன் சரவணமுத்து
Dr. அர்ச்சுனா சிற்றம்பலம்
பேராசிரியர் ஆ. சொர்ணராஜா
சிவபூசம் சுகுமார்
Dr. லூயிஸ் வசந்தகுமார்
ஐக்கிய அமெரிக்கா:
Dr. ஜெராட் R. பிரான்சிஸ்
சுபா பிரான்சிஸ்
ஜெயப்பிரகாஷ் ஜெயலிங்கம்
வேலுப்பிள்ளை கமலநாதன்
சிவா கருணாகரன
ஜனார்த்தன் கிருபானந்தன்
Dr. யோகா நவயோகராஜா
டனி T படிகலிங்கம்
அசோக் பொன்னம்பலம்
Dr. தவேந்திரா ராஜா
அரவிந்த் சுகுணேஸ்
சுபா சுந்தரலிங்கம்
Dr. மாலதி வரதராஜா
தென் ஆபிரிக்கா இணைப்பாளர்: அபே நாயுடு
நார்வே இணைப்பாளர்: கில்லறி லியோ
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications