யாஹூ ஜியோசிட்டிஸ் மூடல்!

டாட் காம் வர்த்தகம் உச்சத்தில் இருந்த போது ஜியோசிட்டிஸை 3 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது யாஹூ.
ஆனால் இந்த தளத்தையும், இலவச வெப் ஹோஸ்டிங் சேவையையும் தொடர்ந்து தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக யாஹூ அறிவித்துள்ளது.
இப்போது புதிதாக கட்டண வெப் ஹோஸ்டிங் திட்டத்தை துவக்கியுள்ள யாஹூ (ஏற்கெனவே கட்டண ஹோஸ்டிங் உண்டு. அது தனி.), ஆரம்ப கட்டச் சலுகையாக ஒரு வருடத்துக்கு 5 டாலர் மட்டுமே என இப்போது அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு செலவுகளைக் குறைத்துக் கொண்ட யாஹூ, அதன் பலனாக மூன்று மடங்கு லாம் ஈட்டியதாகக் கணக்கு காட்டியது (விற்பனையில் 12 சதவிகித வீழ்ச்சி கண்டதும் இந்த ஆண்டுதான்).
எனவே இதே வழியை மேலும் சில வருடங்களுக்கு பின்பற்றும் திட்டத்தில் உள்ளது யாஹூ. அதன் விளைவுதான் இந்த ஜியோசிட்டிஸ் சேவை நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள உலகில் நெருக்கமான தொடர்பு கொண்டவர்களுக்கு ஜியோசிட்டிஸ் மூடல் அறிவிப்பு பெரும் வருத்தத்தை அளித்துள்ளது. 1995ல் ஜியோசிட்டிஸ் உதயமானது. அன்றைக்கு இணையதளம் என்பதே பெரும் கனவாகத்தான் இருந்தது இந்தியா போன்ற நாடுகளில்.
'நமக்கு ஒரு இணைய தளம் அமைக்க வேண்டுமென்றால் பெரிய அளவு பணம் செலவாகுமோ என்று பலரும் தயங்கிய போது, யார் வேண்டுமானாலும் சொந்தமாக இணையதளத்தை அமைத்துக் கொள்ளலாம்' என்று அறிவித்தது ஜியோசிட்டிஸ். அதன் பிறகு இந்த தளத்தின் வளர்ச்சியைப் பார்த்து 3 பில்லியன் டாலர் கொடுத்து 2005-ல் வாங்கியது யாஹூ.
கடந்த ஏப்ரல் மாதமே இந்த சேவையை நிறுத்திக் கொள்ளப் போவதாக யாஹூ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications