For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை-200 பஸ்களுக்கு பதில் புதிய பேருந்துகள்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகரில் ஓடும் 200 பழைய பஸ்களுக்குப் பதிலாக இன்று முதல் புதிய பஸ்கள் விடப்படவுள்ளன.

இன்று மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் விழாவில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த பஸ்களை இயக்கி வைக்கிறார்.

சென்னை மாநகரில் தினமும் 3,000 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பழைய பஸ்களுக்கு பதில் புதிய பஸ்கள் விடவும், புதிய வழித்தடங்களில் பஸ்களை இயக்கவும், ஏற்கனவே உள்ள வழித்தடங்களில் கூடுதல் பஸ் வசதி அளிக்கவும் 1,000 புதிய பஸ்கள் வாங்கப்படுகி்ன்றன.

இதில் முதல் கட்டமாக 200 பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. அவை இன்று இயக்கப்படுகின்றன. இன்று அறிமுகப்படுத்தப்படும் 200 பஸ்களும் பழைய பஸ்களுக்கு பதிலாக இயக்கப்படுகின்றன.

மேலும் 800 பஸ்கள் டிசம்பர் மாதத்திற்குள் இயக்கப்படவுள்ளன.

'பொள்ளாச்சி' விளம்பரம்- ஸ்டாலின் கிண்டல்!

திமுகஅரசு விழாவுக்கு அதிமுகஎம்.எல்.ஏ. ஒருவர் முழுப் பக்க விளம்பரம் செய்துள்ளாரே என்று நினைத்து பெருமைப்படுகின்றேன். அவர்களும் இந்த விழாவுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கலாம். அதனால் விளம்பரம் கொடுத்து இருக்கலாம் என்று, பொள்ளாச்சியில் நடந்த விழாவில் ஸ்டாலின் பேசினார்.

பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாண்ட், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குடிநீர் திட்டம், குறிச்சி-குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டம் போன்ற பணிகளுக்கான திறப்பு விழாவும், பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ள உள்ள பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் ரூ. 260 கோடி மதிப்பிலான 4,684 திட்டப் பணிகளை ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில்,

பொள்ளாச்சியில் 2007, நவம்பரில் இந்த திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இரண்டு ஆண்டுக்குள் பணிகள் நிறைவு செய்யப்பட்டு இன்று திறப்பு விழா நடத்தப்படுகிறது.

ஆனால், பொள்ளாச்சி தொகுதியின் எம்.எல்.ஏவாக உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயராமன், இந்த திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை என்று கூறி பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளார். அவரது இந்த செயல் எனக்கு சிரிப்பை ஏற்படுத்துகிறது.

திமுகஅரசு விழாவுக்கு அதிமுகஎம்.எல்.ஏ. ஒருவர் முழுப் பக்க விளம்பரம் செய்துள்ளாரே என்று நினைத்து பெருமைப்பட்டேன். அவர்களும் இந்த விழாவுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கலாம். அதனால் விளம்பரம் கொடுத்து இருக்கலாம்.

இதனால், அந்த எம்எல்ஏ நிலை என்னவாகப் போகிறதோ? அவர்கள் இந்த விழாவுக்கு வரவில்லை என்றாலும் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

ஸ்டாலினை வரவேற்க மயிலிறகில் ஆர்ச்:

முன்னதாக பொள்ளாச்சிக்கு வருகை தந்த ஸ்டாலினுக்கு மயில் இறகுகளால் வடிவமைக்கப்பட்ட அலங்கார வளைவு வைத்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவரை வரவேற்க பொள்ளாட்சி முழுதும் டிஜிட்டனர் பேனர், போஸ்டர், அலங்கார வளைவுகளை திமுகவினர் அமைத்திருந்தனர்.

கோவை ரோட்டில் நகர திமுக சார்பில், மயில் இறகுகளால் வடிவமைக்கப் பட்ட அலங்கார வளைவு ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

தேசிய பறவையான மயிலை கொன்று அதன் இறகுகளை கொண்டு வளைவு அமைக்கப்பட்டது, சட்டத்தை மீறிய செயல் என்றும், இதை வைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எனடுக்க வேண்டும் என்று அதிமுகவினர் பேராட்டத்தில் குதித்தனர். மேலும் இது குறித்து வனத்துறைக்கு புகார் தெரிவித்தனர். ஆனால் அந்த புகாரை வனத்துறை உயர் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

தவறு செய்பவர்கள் ஆளும் கட்சியினர் என்றால் அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்வதும், எதிர்க்கட்சிகள் என்றால் அவர்கள் மீது உடனே சட்டத்தை பாய்ச்சுவது என்றும் அரசு அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X