ஒபாமாவை குரங்கு என்று கூறி ஆஸி. அரசியல்வாதி அனுப்பிய ட்விட்டரால் சர்ச்சை

இனவெறி விமர்சனங்களுக்குப் பெயர் போனவர்கள் ஆஸ்திரேலியர்கள் என்பது உலகம் அறிந்த விஷயம். கிரிக்கெட்டில் இது சர்வ சாதாரணமாக உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை குரங்கு என்று விமர்சித்து இனவெறியை வெளிப்படுத்தியுள்ளார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அரசியல்வாதி நிக் சோவ்டன்.
அங்குள்ள குவீன்ஸ்லாந்து தேசிய விடுதலைக் கட்சியின் இளைஞர் பிரிவு உறுப்பினர் இந்த சோவ்டன். இவர் தனது ட்விட்டர் தளத்தில், ஒபாமாவை விமர்சித்து எழுதியுள்ளார்.
பாரக் ஒபாமாவின் பேட்டி ஏபிசி டிவியில் ஒளிபரப்பானது. ஒபாமாவை கெர்ரி ஓ பிரையன் என்ற நிருபர் பேட்டி கண்டு கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தனது ட்விட்டர் தளத்தில் இப்படி எழுதினார் சோவ்டன்.
ஒரு குரங்கை பேட்டி எடுக்க வேண்டுமானால் படகை எடுத்துக் கொண்டு டரோங்கோவுக்குப் போயிருக்கலாம். அதை விட்டு விட்டு ஏன் கெர்ரியை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்கள் என்று தெரியவில்லை என்று கூறியிருந்தார் சோவ்டன்.
இன்னொரு செய்தியில், நான் குரங்கைப் பார்க்க விரும்பினால் வன விலங்குகள் குறித்த சானலைப் பார்த்துக் கொள்வேன் என்று கூறியிருந்தார்.
இந்த சோவ்டனுக்கு வயது வெறும் 22 தான். கிரிபித் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்று வருகிறார். இவர் இப்படி இனவெறியுடன் எழுதியிருப்பது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று அவரது கட்சிக்குள் பலத்த குரல் கிளம்பியுள்ளது. இதையடுத்து சோவ்டன் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
தனது ட்விட்டர் செய்தி குறித்து விளக்கியுள்ளார் சோவ்டன். அவர் கூறுகையில், அது ஒரு ஜோக். என்னைப் பற்றித் தெரிந்தவர்கள் இதைப் புரிந்து கொள்வார்கள் என்றார் சோவ்டன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications