பாளை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் சில்மிஷ ஊழியர் சஸ்பெண்ட்!
நெல்லை: பாளை ஹைகிரவுண்ட் மருத்துவமனையில் பெண் ஊழியர் மற்றும் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையான ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே பிரிவில் பதிவேடுகளை சரிபார்க்கும் பிரிவில் பணியாற்றியவர் மணிகண்டன்.
இவர் மருத்துவமனையில் பணிபுரியும் பெண்கள் மற்றும் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் இரட்டை அர்த்த பேச்சுகள், ஆபாச ஜோக்குகள், தொட்டு பேசுவது, அரை நிர்வாண உலா என பல்வேறு சில்மிஷ நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.
மணிகண்டனின் சில்மிஷங்களை செல்போனில் படம் பிடித்த ஒரு மாணவி, மருத்துவ கல்லூரி முதல்வரிடம் ஆதாரத்தோடு புகார் தெரிவித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஹைகிரவுண்ட் மருத்துவமனை ஊழியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மருத்துவமனை நி்ர்வாகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது.
மணிகண்டனிடம் விசாரணை நடத்த 5 பேர் கொண்ட டாக்டர் குழு அமைக்கப்பட்டது. ஆதாரத்துடன் கூறப்பட்ட புகார் குறித்து மணிகண்டனிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணை குறித்த அறிக்கை ஹைகிரவுண்ட் மருத்துவமனை நிர்வாகத்திடம் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஊழியர் மணிகண்டனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது.
இதுகுறித்து பாளை ஹைகிரவுண்ட் மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) கனகராஜ் கூறுகையில்,
'பாளை ஹைகிரவுண்ட் மருத்துவமனை ஊழியர் மணிகண்டன் மீது செக்ஸ் புகார் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் மணிகண்டன் மீதான புகார் நிருபிக்கப்பட்டதாக விசாரணை குழுவினர் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் ஊழியர் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்' என்றார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications