நாடு கடந்த தமிழீழ அரசு... நியூஸி., சுவிஸ், நார்வே தேர்தல் முடிவுகள்
பெர்ன்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் பற்றிய விபரங்களை பொறுப்பாளர்கள் அறிவித்து வருகின்றனர்.
நாடுகடந்த தமிழீழ அரசுக்காக 135 பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல்கள் உலகின் பல்வேறு நாடுகளில் நேற்று நடந்தது. இப்போது பல நாடுகளிலும் வாக்குகள் எண்ணும் பணி நடந்து வருகிறது.
நியூஸிலாந்து
முதல் முடிவு நியூஸிலாந்து நாட்டிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டிலிருந்து இரண்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நியூஸிலாந்தின் ஆக்லாந்து நகரம் உள்ளிட்ட வடக்குப் பகுதியின் பிரதிநிதியாக தேவராஜன் ஆறுமுகம் வெற்றி பெற்றுள்ளார்.
வெலிங்டன் நகரம் உள்ளடங்கலான நியுசிலாந்தின் மற்ற பகுதிகளுக்கான பி்ரதிநிதியாக கலாநிதி சிவபாதம் நகுலேஸ்வரன் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதன்மை தேர்தல் அதிகாரி ஜான் மின்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
நார்வே
நார்வே நாட்டிலிருந்து 3 பிரதிநிதிகள் தேர்வாகியுள்ளனர்.
அவர்கள் விவரம்:
நார்வேயின் கிழக்குப் பிராந்தியத்துக்காக, ஜெயசிறி பாலசுப்ரமணியம், முரளி சிவானந்தன் ஆகியோரும், மற்ற பிராந்தியத்துக்காக சிவகணேசன் தில்லையம்பலமும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சுவிட்ஸர்லாந்து
சுவிட்ஸர்லாந்து பிரதிநிதிகளின் விபரங்களை சுவிஸ் தேர்தல் ஆணையாளர் கார்த்திகேயப்பிள்ளை ஆனந்தநடராஜா அறிவித்துள்ளார்.
சுவிஸின் ஏழு தேர்தல் தொகுதிகளின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 பிரதிநிதிகள் விபரம் வருமாறு:
தேர்தல் தொகுதி – பெர்ன், சொலோதர்ன்
செல்வி. புத்திரசிகாமணி சுகன்யா
வீரகத்தி சுந்தரலிங்கம்
தேர்தல் தொகுதி – ஜூரிச், ஸ்காப்ஹசன், துர்காவ்
செல்வராசா ஜெயம்
ஆழ்வாப்பிள்ளை தயானந்
தேர்தல் தொகுதி – பாசல், அராவ், ஜூரா
மகாலிங்கம் பாஸ்கரலிங்கம்
தேர்தல் தொகுதி –லுசெர்ன், ஸக், நிட்வால்டன், ஒப்வால்டன், ஸ்வைஸ், யூரி
பாலன் சிவபாதம்
தேர்தல் தொகுதி – வாத், வலைஸ், ஜெனீவா, பிரிபோர்க், நியூசாட்டல்
சின்னதம்பி இரஜனிதேவி
முருகையா சுகிந்தன்
தேர்தல் தொகுதி – கிரௌபூண்டன், கிளாரஸ், செயின்ட் காலன், அபென்ஸெல்லர்
சிவராஜா சிறிசயீதா
தேர்தல் தொகுதி – டெஸின், டிசினோ
செல்லத்துரை மகேந்திரம்பிள்ளை
மேலும் தேர்தல் தொகுதிகள் 3, 5 ல் பிரதிநிதிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதிநிதிகள் பற்றிய விபரங்கள் விரைவில் வெளியாக உள்ளன.
இதே போல உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் தேர்தல் முடிந்து, வெற்றி பெற்றோர் விபரங்கள் வரத் துவங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications