துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்!
ஹைதராபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து இல்லறத்திற்குள் நுழைந்துள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, குடித்தனத்தைத் தொடங்குதவற்காக துபாயில் வீடு பார்த்து வருகிறாராம்.
இதுகுறித்து சானியா கூறுகையில், எனக்கு துபாயை மிகவும் பிடிக்கும். எனக்கு அது இன்னொரு வீடு போல. இப்போது நல்லதாக ஒரு வீடு பார்த்து வருகிறோம். எங்களது தொழில் நிமித்தம் இங்கிலாந்துக்குச் செல்வதற்கு முன்பே வீட்டைப் பார்த்து முடித்து விட தீவிரமாக உள்ளோம்.
எனது கையில் ஏற்பட்ட காயம் தற்போது வலியைக் கொடுக்கவில்லை. சரியாகி வருகிறது. எனது பயிற்சி திட்டமிட்டபடி நடந்து வருகிறது.
துபாயில் செட்டிலாவது என்பது எங்கள் இருவருக்குமே வசதியானது, செளகரியமானது. மீடியா வெளிச்சத்திலிருந்து தப்ப இது உதவும்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் செட்டிலாவீர்களா என்றுகேட்டிருந்தால் நிச்சயம் மாட்டேன் என்றுதான் கூறியிருப்பேன். ஆனால் இப்போது எல்லாமே மாறிப் போய்விட்டது. துபாய்தான் எங்கள் இருவருக்கும் சரிப்பட்டு வரும்.
இங்கு இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த நிறையப் பேர் வசித்து வருகின்றனர். எனவே சொந்த ஊரில் இருப்பதைப் போலவே உணர முடியும்.
மேலும் உலகின் எந்தப் பகுதிக்கும் இங்கிருந்து எளிதில் போக விமான வசதி உண்டு.
திருமணத்திற்குப் பிறகும் டென்னிஸ் ஆட முடியுமா என்ற கேள்வியே தவறு. எத்தனை தாய்மார்கள் டென்னிஸ் ஆடுகிறார்கள் என்று தெரிய வந்தால் ஆச்சரியப்படுவீர்கள். நிறையப் பேருக்கு அது தெரியவே தெரியாது என்றார் சானியா.
திருமணத்திற்குப் பிறகு பிரிமிங்காமில் நடைபெறும் தொடரில் முதல் முறையாக பங்கேற்கிறார் சானியா. அதைத் தொடர்ந்து விம்பிள்டன் போட்டியில் கலந்துகொள்கிறார்.
தொடர்ந்து அக்டோபரில் காமன்வெல்த் போட்டியிலும், பின்னர் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் சானியா விளையாடவுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications