காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் கார்-நகைகள் கொள்ளை!

ராமநாதபுரம் எம்எல்ஏ அசன் அலிக்கு சென்னை நுங்கம்பாக்கம் நாகேஸ்வரா ரோட்டில் சொந்த வீடு உள்ளது. இதில் அவரது மகள் அஹானா குடும்பத்துடன் வசித்து வருகிறார். சென்னைக்கு அசன் அலி வரும்போது இந்த வீட்டில் தங்குவார்.
சட்டசபைக் கூட்டம் நடந்தபோது மனைவி ரம்லாவுடன் இங்கு தங்கியிருந்த அலி, தற்போது ராமநாதபுரம் சென்று விட்டார்.
அவரது மகள் கடந்த வாரம் குடும்பத்துடன் மலேசியா சென்று விட்டார். எனவே வீடு பூட்டிக் கிடந்தது. வீட்டின் போர்டிகோவில் மாருதி கார் மற்றும் ஒரு ஆட்டோ நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை டிரைவர் முகமது அப்துல் காதர் என்பவர் காரை எடுப்பதற்காக வந்தார். அப்போது கார் அங்கில்லை. ஆட்டோ மட்டுமே நின்றது. வீட்டின் கதவு திறந்து கிடந்தது. ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து கிடந்தன. வீட்டுக்குள் பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தன.
இது பற்றி டிரைவர், எம்.எல்.ஏவின் மைத்துனர் அஷ்ரப் அலியிடம் தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த டி.வி, லேப்-டாப், டி.வி.டி. பிளேயர், பீரோவில் இருந்த நகைகள் உள்பட ஏராளமான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
கொள்ளையர்கள் வீடு புகுந்து பொருட்களை திருடிவிட்டு காரின் கண்ணாடியை உடைத்து அதில் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளனர்.
இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டு்ள்ளது.
வீட்டில் 8 பீரோக்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், டி.வி., லேப்-டாப், கார் உள்பட திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 10 லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ரிலாக்ஸாக திருடிய கொள்ளையர்...
கொள்ளையர்கள் வீட்டில் உள்ள பிரிட்ஜில் இருந்த பிஸ்கெட்களை சாப்பிட்டு விட்டு, நிதானமாக பொருள்களை அள்ளிச் சென்றுள்ளனர்.
திருட்டு குறித்து துணை கமிஷனர் அன்பு கூறுகையில்,
யாரோ நன்கு தெரிந்தவர்கள்தான் வீட்டை நோட்டமிட்டு இந்த கொள்ளையை நடத்தியுள்ளனர். கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.
கொள்ளை பற்றிய தகவல் அறிந்த எம்.எல்.ஏ. அசன் அலி சென்னைக்கு விரைந்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications