அமெரிக்க ராணுவ தள சர்ச்சை-ஜப்பான் பிரதமர் யுகியோ ஹடயோமா ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

Yukio Hatoyama
டோக்கியோ: ஜப்பானின் ஓகினோவாவில் உள்ள அமெரிக்க ராணுவ தள சர்ச்சையைத் தொடர்ந்து பிரதமர் யுகியோ ஹடயாமா ராஜினாமா செய்துள்ளார்.

ஆளும் ஜப்பான் ஜனநாயகக் கட்சி முக்கியத் தலைவரான இசிரோ ஓசாவாவும் பதவி விலகவுள்ளதாக ஹடயாமா தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவிக்கு ஹடயாமா வந்து எட்டு மாதங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தனதுவிலகல் குறித்து ஹடயாமா கூறுகையில், ஓகினாவா தீவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தை அகற்றுவேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தேன். அதுதொடர்பான எனது நிலையை பலர் புரிந்து கொள்ளவில்லை. இதையடுத்து நான் பதவி விலகுகிறேன் என்றார்.

கடந்த பொதுத் தேர்தலின்போது அமெரிக்க ராணுவ தளத்தை மாற்றுவேன் என்று உறுதியளித்திருந்தார் ஹடயாமா. ஆனால் சமீபத்தில் இந்த வாக்குறுதியை மீறும் வகையில் அவரது நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

ஓகினாவாவில் உள்ள அமெரிக்க படைத் தளத்திற்கு அப்பகுதி மக்கள் பல காலமாகவே தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது கடந்த பல வருடங்களாக ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து அமெரிக்க படைத் தளத்தை அகற்றுவேன் என்பதை தேர்தல் வாக்குறுதியாக முன்வைத்து தேர்தலை சந்தித்தார் ஹடயாமா.

ஆனால் கடந்த வாரம் அவரது நிலையில் மாற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து அமெரிக்கப் படைத்தளத்தை இயங்க அனுமதிக்கப் போவதாக அவர் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கூட்டணியில் இடம் பெற்றிருந்த சமூக ஜனநாயக கட்சி கூட்டணியை விட்டு விலகியது. இதனால் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.

மேலும், ஹடயாமாவின் சொந்தக் கட்சியான ஜப்பான் ஜனநாயக கட்சிக்குள்ளும் அவருக்கு எதிர்ப்பு வலுத்தது. இதையடுத்து தற்போது பதவி விலகியுள்ளார் ஹடயாமா.

தன்னைத் தொடர்ந்து ஜப்பான் ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் இசிரா ஓசாவாவும் பதவி விலகவுள்ளதாக ஹடயாமா தெரிவித்தார். இசிரா கிங் மேக்கர் என அழைக்கப்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் சில நாட்களில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படவுள்ளார். நிதியமைச்சர் நவோடா கான் புதிய பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+