For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் 'மீனவ நண்பன்' எம்.ஜி.ஆரின் ஆட்சி வரட்டும்.. ஜெயலலிதா

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தமிழகத்தில் மீனவ நண்பனாம் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சி அமைந்தவுடன் மீனவர்களின் துயரங்களை துடைப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலை கண்டிக்கும் வகையில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் கடிதங்களை எழுதியதுபோல, மீனவர்கள் பிரச்சனையிலும் கடிதம் எழுதியும், கண்டனம் தெரிவித்தும் காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் கோடியக்கரைக்கும், தோப்புத் துறைக்கும் இடையே தங்களது படகுகளில் புதன்கிழமை (ஜூலை 7) அன்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளை சுற்றிவளைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் செல்லப்பன் என்பவர் உயிரிழந்துள்ளார். தமிழக மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்கள், உணவுப் பொருட்கள் மற்றும் வலைகளை இலங்கை கடற்படையினர் கடலில் தூக்கி வீசியுள்ளனர். அறிவழகன் என்பவரின் படகில் இருந்தவர்களை கொடூரமாகத் தாக்கி, நிர்வாணப்படுத்தி விரட்டி அடித்துள்ளனர். நாகை மாவட்டம், புஷ்பவனம் கிராமத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களையும் கொடுமைபடுத்தியுள்ளனர்.

இதே போன்று, நாகப்பட்டினம் மாவட்டம் புஷ்பவனம் கிராமத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நிர்வாணப்படுத்தி கொடுமைபடுத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் இந்த கொடூரச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை கடற்படையினரின் இந்த கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது. இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் இலங்கை அரசு அடிக்கடி ஈடுபட்டு வருகிறது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருணாநிதி வழக்கம்போல பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை தூதரகம் முன்பு திமுக மீனவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

உண்மையிலேயே கருணாநிதிக்கு மீனவ மக்களின் மீது அக்கறை இருக்குமானால், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும். மத்தியில் உள்ள திமுக அமைச்சர்களை ராஜிநாமா செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும். ஆனால், இதை அவர் செய்ய மாட்டார்.

மீனவ நண்பனாம் எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் அமைந்தவுடன் மீனவர்களின் துயரங்களை துடைப்பதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும், அவர்களுடைய இன்னல்கள் களையப்படும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு வைகோ நிதியுதவி:

இதற்கிடையே இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த செல்லப்பன் குடும்பதினருக்கு மதிமுக பொதுச் செயாலளர் வைகோ ரூ.25,000 நிதியுதவி வழங்கியுள்ளார்.

செல்லப்பனின் மனைவி ருக்மணியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இந்த நிதியை அவர் வழங்கினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X