For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ.150 கோடி செலவில் 11-ம் வகுப்பு மாணவர்கள் 5.5 லட்சம் பேருக்கு இலவச சைக்கிள்கள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் 5.5 லட்சம் பேருக்கு ரூ.150 கோடி செலவில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளன.

கடந்த 2004-2005-ம் ஆண்டு அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் திட்டம் அறிமுக்ப்படுத்தப்பட்டது. முதலில் 11-ம் வகுப்பு மாணவிகளுக்கு மட்டுமே இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அதன் பிறகு மாணவர்களும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து 2005-2006-ம் கல்வியாண்டு முதல் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் 5 லட்சம் பேருக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை மொத்தம் 27 1/2 லட்சம் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் ஆண்டுக்கு ரூ.110 கோடி வரை செலவாகிறது.

இந்த கல்வியாண்டில் ரூ.150 கோடி செலவில் 5 1/2 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. இதற்கான டெண்டர் விரைவில் இறுதி செய்யப்பட்டு, 5 கம்பெனிகளுக்கு டெண்டர் வழங்கப்படும்.

இந்த இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைக்கிறார்.

செப்டம்பர் மாதத்திற்குள் மாநிலத்தில் உள்ள அனைத்து 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டுவிடும் என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் இலவச சைக்கிள்கள் மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்ட் பள்ளிகளில் படிக்கும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் கொடுப்பதற்கு பதிலாக, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கினால் அவர்கள் 12-ம் வகுப்பு வரை அதை பயன்படுத்திக் கொள்வார்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X