For Daily Alerts
எம்ஜிஆருக்கு அதிமுக கொடியை வடிவமைத்து தந்தவர் மரணம்
சென்னை: அதிமுக கொடியை வடிமைத்தவரான அங்கமுத்து காலமானார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் நிறுவனர்களில் ஒருவரான அங்கமுத்து (81) எம்ஜிஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் உள்பட 250 படங்களுக்கு செட் அமைத்தவர் ஆவார்.10க்கும் மேற்பட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
சில ஆண்டுகளாகவே உடல் நலமில்லாமல் இருந்து வந்த அங்கமுத்து, இன்று காலை மாரடைப்பால் இறந்தார்.
எம்ஜிஆர் தனிக் கட்சி தொடங்கியபோது இவர்தான் அதிமுக கொடியை வடிவமைத்து கொடுத்தார். எம்ஜிஆர் காலத்தில் தமிழக மேலவை உறுப்பினராகவும் இருந்தார்.
அங்கமுத்துவின் உடல் நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.