For Daily Alerts
வி.கே.புரம்: ஆற்றில் குளித்த திமுக பிரமுகர் நீரில் மூழ்கி பலியானார்.
கோவை: அருகே உள்ள ரத்னபுரி வ.உ.சி தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். தி.மு.க. பிரமுகரான இவர் அங்கு சைக்கிள் கடை நடத்தி வந்தார். நேற்று நண்பர்கள் 17 பேருடன் இவர் ஒரு வேனில் பாபநாசத்திற்கு வந்தார். காலையில் அணையில் படகு சவாரி சென்றுவிட்டு மதியம் கரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு அனைவரும் வந்தனர்.
முதலில் நண்பர்கள் அனைவரும் தாமிரபரணி ஆற்றில் குளித்து விட்டு திரும்பினர். அதன் பிறகு கண்ணன் மட்டும் அங்குள்ள பாலத்தின் மேல்பகுதிக்கு குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.
இதை பார்த்ததும் அங்கு நின்றிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால், மூச்சு திணறி அவர் பரிதாபமாக இறந்தார். போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி அம்பாசமுத்திரம அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.