For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காமன்வெல்த் விளையாட்டு நிதி முறைகேடுகளில் ராகுலுக்குத் தொடர்பு-சொல்கிறார் சாமி

By Chakra
Google Oneindia Tamil News

Subramanian Swamy
சென்னை: காமன்வெல்த் விளையாட்டு ஊழலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்குத் தொடர்பு உள்ளது. இதுதொடர்பான தகவல் நம்பத்தகுந்த வட்டாரத்திலிரு்து எனக்கு வந்துள்ளது என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நான் அன்மையில் அமெரிக்காவில் இருந்தபோது நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து காமன்வெல்த் விளையாட்டுப்போட்டுகளுக்கான ஏற்பாடுகளில் மொத்தம் செலவிடப்பட்ட தொகையான ரூ. 40,000 கோடியில் காண்ட்ராக்டர்கள், ஆலோசகர்கள் ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட ஊதியத்தொகை என்ற போர்வையில் சுமார் ரூ. 1,500 கோடி லஞ்சமாக பெறப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

இதில் ஒரு பெரும் தொகை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு லண்டனில் வைத்து தரப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள போது ராகுல் காந்தி ரவுல் வின்சி என்ற பெயரில் வலம் வந்துள்ளார். மாதம் ஒரு முறையாவது லண்டனுக்கு விஜயம் செய்யும் ராகுல் காந்திக்கு இந்திய ஹைகமிஷ்னர் அலுவலகத்தைச் சார்ந்த ஒருவர் எடுபிடியாக செயல்பட்டு வருகிறார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ராகுல் காந்தியை சட்ட நடவடிக்கையிலிருந்து காப்பாற்ற பழி அனைத்தையும் சுரேஷ் கல்மாடி, ஷீலா தீட்சித் ஆகியோர் மீது சுமத்தியுள்ளது.

காமன்வெல் விளையாட்டு போட்டிகளின் செலவு விவகாரங்கள் குறித்து மத்திய புலனாய்வுத்துறை உதவியுடன் பதவியிலுள்ள ஒரு உச்சநீதிமன்ற நீதிபதியால் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

நக்ஸல் தீவிரவாதிகள் மீது இரக்கமே காட்டக்கூடாது. இந்தப் காஷ்மீருக்கு மாநில சுயாட்சி வழங்கப்போவதாக பிரதமர் அறிவித்திருப்பதை வாபஸ் பெறவேண்டும். அங்கு மாநில சுயாட்சி வழங்கினால் பயங்கரவாதிகளுக்கு உற்சாகம் ஏற்படும். தீவிரவாதம் வளரும். எனவே மாநில சுயாட்சி வழங்கக்கூடாது.

தமிழ்நாட்டில் ஊழலை எதிர்த்தும் இந்துத்துவத்தை வலியுறுத்தியும் பிரசாரம் செய்ய உள்ளோம்.

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் என்பது மக்கள் கையில் உள்ளது. நாங்கள் இப்போது எந்த கூட்டணியிலும் இல்லை. ஜனவரி 14க்குப் பிறகு எங்கள் நிலையை அறிவிப்போம் என்றார் சாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X