முஸ்லீம் ஊழியையிடம் மத விரோதம் காட்டிய டிஸ்னி-அமெரிக்காவில் சர்ச்சை

அந்தப் பெண்ணின் பெயர் இமேன் போல்தால் (26). இவர் டிஸ்னிலான்ட் உள்ளே இருக்கும் ரெஸ்டாரென்ட்டில் பணிப் பெண்ணாக பணியாற்றி வருகிறார். இவரிடம், இனிமேல் வாடிக்கையாளர்கள் முன்பு தலையை துணியால் மூடியபடி பணியாற்றக் கூடாது என்று கூறிய நிர்வாகம், அத்தோடு நில்லாமல் கட்டாயப்படுத்தி அதை கழற்றவும் செய்துள்ளது.
இதையடுத்து அமெரிக்க சம வேலைவாய்ப்பு கமிஷனில் புகார் கொடுத்துள்ளார் இமேன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் ஸ்கார்ப் கட்டியபடி பணிக்குச் சென்றேன். அப்போது அங்கிருந்த மேற்பார்வையாளர்கள், அதை கழற்றுமாறு கூறினர். நான் மறுக்கவே, இனிமேல் ஸ்கார்புடன் பணிக்கு வரக் கூடாது. மீறி வருவதாக இருந்தால் வேலை கிடையாது, வீட்டுக்குப் போய் விடலாம் என கூறி விட்டனர்.
தற்போது ரமதான் மாதம் என்பதால் நான் ஸ்கார்ப் கட்டியபடி வேலை செய்து வருகிறேன். அன்று மட்டுமல்லாமல், அடுத்த இரண்டு நாட்களும் கூட இதேபோலவே நடந்து கொண்டனர் மேற்பார்வையாளர்கள் என்றார்.
இந்த விவகாரம் குறித்து அமெரிக்க இஸ்லாமிய உறவுக் கவுன்சிலைச் சேர்ந்த வழக்கறிஞர் அமீனா காஸி கூறுகையில், எந்த வகையிலும் இமேனை வேலையில் வைத்துக்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. இதனால்தான் தொடர்ந்து பிடிவாதமாக இவ்வாறு கூறி மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளனர் என்றார்.
இந்த சர்ச்சை குறித்து டிஸ்னிலேன்ட் செய்தித் தொடர்பாளர் சூஸி பிரவுன் கூறுகையில், டிஸ்னிக்கென்று சில விதிமுறைகள் உள்ளன. அதை நாங்களோ, அல்லது யாருமோ மீறமுடியாது. வாடிக்கையாளர்கள் மத்தியில்தான் தலையில் ஸ்கார்ப் கட்டியபடி வரக் கூடாது என்று இமேனுக்குக் கூறப்பட்டது. வாடிக்கையாளர்கள் இல்லாத பகுதியில் அவர் தலையில் ஸ்கார்புடன் பணியாற்ற வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால் அதை அவர் ஏற்கவில்லை.
பணியாளர்களுக்கு என்று உள்ள சீருடையைத் தவிர்த்து வேறு உடை அணிய டிஸ்னியில் அனுமதி இல்லை. அது வினோதமாகவும் இருக்கும் என்பதால்தான் இந்த விதிமுறை.
அவருக்கு வேறு இடத்தில் வேலை தர முயற்சித்தோம். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. மாறாக வீடு திரும்பி விட்டார் என்றார்.
மொராக்கோவைப் பூர்வீகமாகக் கொண்டவர் இமேன். கடந்த இரண்டரை வருடங்களாக இந்த ரெஸ்டாரென்ட்டில் பணியாற்றி வருகிறார். இதுநாள் வரை அவர் ஸ்கார்ப் கட்டிக் கொள்ளாமலேயே தான் இருந்து வந்தார். ஆனால் கடந்த ஜூன் மாதம் அமெரிக்க குடியுரிமை தொடர்பான தேர்வுக்கு தயாரானபோதுதான், தங்களது மத சுதந்திரத்தை அனைவரும் கடைப்பிடிக்கலாம், ஸ்கார்ப் அணியலாம் என்ற விதி இருப்பதை அறிந்து இதுகுறித்து டிஸ்னி நிர்வாகத்திடம் கேட்டார்.
அதற்கு அவர்கள் 2 மாதம் வரை சரியாக பதிலளிக்கவில்லை. பின்னர் டிஸ்னியின் உடை வடிவமைப்பாளர்கள் வடிவமைத்துக் கொடுப்பதைப் போன்று ஸ்கார்ப் கட்டலாம் என கூறினர். ஆனால் அது இஸ்லாமிய மத கோட்பாடுகளுக்கேற்ற வகையில் இல்லாததால் அதை அவர் ஏற்கவில்லை. மேலும் தனது விருப்பப்படி அவர் ஸ்கார்ப் கட்டக் கூடாது என்றும் டிஸ்னி கூறியது இப்போது சர்ச்சையில் முடிந்துள்ளது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications