For Quick Alerts
For Daily Alerts
கரூர் முன்னாள் கலெக்டர் மகன் திருமணத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த ஜெ
மதுரை: கரூர் மாவட்ட முன்னாள் கலெக்டர் முனைவர் சோ. அய்யர் இல்லத் திருமணத்திற்கு திடீரென வந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடு்த்தார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
கரூர் மாவட்டத்தில் கலெக்டராகவும், அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் தலைவராகவும் இருந்தவர் முனைவர் சோ. அய்யர். டாஸ்மாக் மூலம் பல கோடி ரூபாய் வருமானம் அரசுக்கு கிடைக்கும் தாரக மந்திரத்தைக் கண்டுபிடித்த பெருமை இவரையே சேரும்.
இவரது மகன் பாலாஜிக்கும், சென்னையைச் சேர்ந்த தமிழ்ச் செல்விக்கும் பத்மாவதி பேலசில் கடந்த 22-ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் சர்ப்ரைஸாக வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மணமக்களை வாழத்திவிட்டு மறக்காமல் போட்டாவுக்கும் போஸ் கொடுத்தார்.
ஜெயலலிதாவின் வருகையால் அங்கிருந்தவர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்களாம்.